மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஆட்டோமேஷனால் வேலைப் போய்விடும் என்று கவலை வேண்டாம், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆட்டோமேஷனால் இந்தியாவில் தொடர்ந்து வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் இது 69 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
பெரிய பாதிப்பு இருக்காது
எனினும், மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஆட்டோமேஷன் சாத்தியமானாலும் பெரிய அளவில் வேலை வாய்ப்புக் குறை வாய்ப்பில்லை என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
அரசும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்று மாநிலங்கள் அவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி விகிதம்
இந்திய அரசின் வளர்ச்சி விகிதம் நீண்ட காலமாக 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. எனவே வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் குறைவும் செய்யும். அதனைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மோடி அரசின் முன்னுரிமை
நரேந்திர மோடி அரசாங்கத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் முதலாவதாக வேலைவாய்ப்பு உருவாக்குவதும் ஒன்று ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு காரணம் மற்றும் விளைவு ஆகும், இது மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, சுமார் 20 அமைச்சகங்கள் 70 துறைகளில் திறமை மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துகின்றன.
வேலை வாய்ப்புத் திட்டங்கள்
மத்திய அரசு வேலை வாய்ப்பினை உருவாக்க அரசு துறை மட்டும் இல்லாமல் தனியார் துறையிலும் அதிகளவில் படிகளை எடுத்து வருகின்றது. அதில் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம், MGNREGS, தீன் தயால் உபாதியா கிராமேன் கௌசல்யா யோஜனா, தீன் தயால் அன்யோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் போன்றவை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications