பெங்களுரூ: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், எங்கேயோ கேட்டது போல் உள்ளதா..? நம்ம விஜய் மல்லையா-வின் சரக்கு நிறுவனம் தான். இந்தியாவில் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் இல்லையென்றாலும், அதிகக் கோடீஸ்வர ஊழியர்களை வைத்துள்ளது.
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் விடவும் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வர ஊழியர்களை வைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..
டியாஜியோ
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் விஜய் மல்லையா-விற்கு இருந்த பங்குகளை டியாஜியோ நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் மொத்த நிர்வாகவும் மல்லையவிடம் இருந்து டியாஜியோ கைக்கு மாறியது.
இதன் காரணமாக நிர்வாகத்திலும் வர்த்தக முறையில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் பண மாற்றங்களைக் கொண்டு வந்து டியாஜியோ இதில் சம்பள அளவுகளும் ஒன்று.
கோடீஸ்வர ஊழியர்கள்
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாத வரையிலான காலத்திற்கு டியாஜியோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்நிறுவனத்தில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடம் 52ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் க்ரிபால்
2017ஆம் நிதியாண்டு அதுவரை நாங்கள் கண்டிராத பல சவால்களைச் சந்தித்தோம் என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் க்ரிபால் தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையிலும் இந்நிறுவனத்தில் கோடீஸ்வர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
உலகின் மிகப்பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாஜியோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் கைப்பற்றியதன் மூலம் இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்கவும், தொடர்ந்து வரும் போட்டியை சமாளிக்கவும் திறமைசாலிகளை ஈர்த்து வருகிறது.
இதன் காரணமாகவே மோசமான சூழ்நிலையிலும் ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளத்தை வாரிவழங்கியுள்ளது.
இன்போசிஸ்
இந்தியாவில் மட்டுமே வர்த்தகம் செய்யும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனமே 56 ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் கொடுக்கும் போது, உலகம் முழுவதிலும் வர்த்தகம் செய்யும் இன்போசிஸ் இந்நிறுவனத்தை விடவும் குறைவான ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.
எப்எம்சிஜி
நாட்டின் முக்கிய வர்த்தகத் துறையாக விளங்கும் எப்எம்சிஜி துறையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தைத் தவிரப் பிற அனைத்து முன்னணி நிறுவனங்களும் கோடீஸ்வர ஊழியர்களின் எண்ணித்தை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை விடக் குறைவுதான்.
சரிவு
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் 2017ஆம் நிதியாண்டு முடிவில் சுமார் 129 ஊழியர்கள் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தைப் பெற்றுள்ளனர். இது கடந்த வருடத்தைக் குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விப்ரோ நிறுவனத்திலும் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது, 2017ஆம் நிதியாண்டில் இது 51ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications