இந்தியா சுதட்ந்திர தின விழாவை ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் 70 சதவீதம் வரை ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன.
அமேசானின் கிரேட் இந்தியன் சேல் மூலம் ஆகஸ்ட் 9 முதல் 11 ஆம் தேதி வரை வங்கம் பொருட்களுக்குப் பல சலுகைகளை அளித்துள்ளது. அதே நாட்களில் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பிக் ப்ரீடம் சேல் என்று அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்கள் இடையில் உள்ள போட்டியில் டாப் பிராண்டுகள் மீது சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர்கள், டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் எனச் சுதந்திர தினத்திற்கு முன்பே மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான பிரத்தியேக லேபிள்களைக் கொண்ட வகைகளில் கிடைக்கும் தயாரிப்புகள் மூலம், இந்த விழாக்காலச் சீசனில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளன. எனவே இங்கு என்ன பொருட்களுக்கு எல்லாம் ஆஃபர்களை இரண்டு நிறுவனங்களும் வழங்குகின்றன என்று பார்ப்போம்.
மொபைல் போன்
அமேசான் நிறுவனம் ஐபோன் விலையில் 35 சதவீதம் வரை ஆஃபர் விலையில் அளித்து வரும் நிலையில் பிளிப்கார்ட் கூகுள் பிக்செல் போனை 18,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது. இதே போன்று பிற தயாரிப்புகளான சாம்சங், லெனோவா மற்றும் மோட்டோராலா மொபைல் போன்களுக்கும் பல ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
பழைய போனை எக்ஸ்சேஞ் செய்யும் போது பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக 1,000 ரூபாயினை அளிக்கின்றது. அமேசான் நிறுவனம் 17,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ் ஆஃபர்களில் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றது.
பேஷன் மற்றும் லைப்ஸ்டைல்
பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 1,200 பேஷன் பொருட்கள் பிராண்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் பல சலுகைகளை அளித்து வருகின்றன.
வீட்டு உபயோக பொருட்கள்
வீட்டு உபயோக பொருட்களான ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி போன்றவற்றுக்கு அமேசான் நிறுவனம் 30 சதவீத சலுகையினை அளிக்கின்றது. இதுவே பிளிப்கார்ட் நிறுவனம் டிவிக்கு மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் சலுகைகளை அளித்துவிட்டு ஏசி, மைக்ரோவேவ் ஓவன் போன்றவற்றுக்குக் கூடுதலாக வாரண்ட்டியை அளித்துள்ளது.
சமையலறை & சாப்பாட்டு அறை
அமேசான் நிறுவனம் சமையலறை & சாப்பாட்டு அறை பொருட்கள் மீது 70 சதவீத ஆஃபர் அளித்துள்ளது. மின்னணு அடுப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 1,099 முதல் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சமையலறை & சாப்பாட்டு அறை பிரிவில் சலுகைகளை வழங்கியுள்ளது.
மரச்சாமான்கள் / பர்னிச்சர்ஸ்
மரச்சாமாஙள், சோஃபா, பெட், பெட்ஷீட்டுகள் போன்றவற்றுக்கு அமேசான் 80 சதவீதம் வரையிலும், பிளிப்கார்ட் நிறுவனம் 50 சதவீதம் வரையிலும் சலுகைகளை அறிவித்துள்ளன.
கிரெடிட்/டெபிட் கார்டுகள் ஆஃபர்
அமேசான் பே மூலம் பொருட்கள் வாங்கும் போது 15 சதவீத கேஷ்பேக் ஆஃபரை அமேசான் இந்தியா வழங்குகின்றது. மேலும் எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும் போது 15 சதவீத கேஷ் பாக் ஆஃபரை வழங்குகின்றது.
பிளிப்கார்ட் நிறுவனம் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீதம் கேஷ் பாக் ஆஃபரையும், ஆக்சிஸ் பாங் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது 5 சதவீதம் டிஸ்கவுண்ட்டும் அளிக்கின்றது.


Click it and Unblock the Notifications