விரைவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி தெரியுமா?

வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பான் கார்டு எனத் தொடங்கி விரைவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் முடிவைப் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதார் கார்டு தொடர்பான வழக்கு ஒன்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும், இதனை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

18 வயது

18 வயது

இந்தியாவில் 18 வயது பூர்த்தி ஆன ஒவ்வொரு குடிமக்களும் ஓட்டுப் போட உரிமை பெற்றவர்கள் ஆவார். ஆனால் வாக்களிக்க அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை என்பது முக்கியமாகும். அதே நேரம் இந்த வாக்காளர் அடையாள அட்டையினை ஒன்றுக்கு மேற்பட்டு பலர் வைத்துள்ளனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றது.

பான், ஆதார் இணைப்பு

பான், ஆதார் இணைப்பு

இப்படிப்பட்ட நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து நீக்கலாம் என்று முடிவு செய்த மத்திய இதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் இணைப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் இணைப்பு

இதைப்பேலவே வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்களும் இணைக்க வேண்டும் என்று தற்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இங்கு நாம் வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் எண்ணை எப்படி இணைப்பது என்று இங்குப் பார்ப்போம்.

ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முதலில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர்க் கீழ் காணும் படிகளைச் செய்வதன் மூலம் சில நிமிடங்களில் இணைப்பைச் செய்துவிடலாம்.

http://www.nvsp.in/

விவரங்களை உள்ளிடுதல்

விவரங்களை உள்ளிடுதல்

உங்களது பெயரை வைத்துத் தேடவும் என்ற தெரிவை தேர்வு செய்து அதில் உங்களது பெயர், தந்தை/கணவர் பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் விவரங்களை உள்ளிட்ட பிறகு தொகுதி அல்லது கூகுள் மேப்பில் இடத்தைத் தேர்வு செய்து, உங்களுக்கு அளிக்கப்படும் குறியீட்டை உள்ளிட வேண்டும்.

தேடல்

தேடல்

மேற்கூறிய தகவல் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு தேடவும் என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்களது விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

ஆதார் எண் ஃபீடு

ஆதார் எண் ஃபீடு

திரையின் வலது புறத்தில் ஆதார் எண்ணை ஏற்றவும் என்ற தெரிவு இருக்கும். அதனைத் தேர்வு செய்த உடன் உங்களுக்குப் புதிதாக ஒரு திரை தோன்றும்.

ஆதார் எண்ணை உள்ளிடுதல்

ஆதார் எண்ணை உள்ளிடுதல்

உங்களுக்குப் புதிதாகத் தோன்றிய திரையில் வாக்காளர் அடையாள் அட்டை எண், ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். பின்னர்ச் சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

அறிவிப்பு

அறிவிப்பு

சமர்ப்பிப்புப் பொத்தானை அழுத்திய உடன் உங்களுக்கு ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் வெற்றிகரமாக இணைப்பதற்கான கோரிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று அறிவிப்பு வரும்.

&..." data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2016/03/12-1457782607-aadhar.jpg">
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் எப்படி இணைப்பது?

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் எப்படி இணைப்பது?

உங்களது ஆதார் கார்டை வாக்காளர் அட்டையுடன் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் இணக்க முடியும்.

அதற்கு "ECILINK <வாக்காளர் அட்டை எண்> <ஆதார் எண்>" என்று டைப் செய்து 166 அல்லது 51969 என்ற எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

 

தொலைப்பேசி அழைப்பு மூலம் எப்படி இணைப்பது?

தொலைப்பேசி அழைப்பு மூலம் எப்படி இணைப்பது?

வாராந்திர நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை அளித்தும் இணைப்பைச் செய்யலாம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தலின் நிலையினை எப்படிச் சரிபார்ப்பது?

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தலின் நிலையினை எப்படிச் சரிபார்ப்பது?

மேலே கூறிய படிகள் அனைத்தையும் மீண்டும் செய்வதன் மூலம் உங்களுக்கு அறிவிப்பு வரும் நேரத்தில் ஏற்கனவே இணைப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறும் போது இணைப்புச் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+