இந்திய இளைஞர்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, நிறுவனத்தைத் துவங்குதல், ஆராய்ச்சி, கனவைத் தேடி செல்லுதல், உலகச் சுற்றுலா, பைக் ரைடிங், போட்டோகிராபி எனப் புதிய விஷயங்கள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இளைஞர்கள் வேலையே தேட விரும்புவதில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
ஜனவரி 2017
இந்த ஆண்டின் ஜனவரி மாத முடிவில், சுமார் 408.4 மில்லியன் இளைஞர்கள் பணியில் இருந்துள்ளனர். அதேபோல் 25.9 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல், பணியைத் தேடிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலை வெறும் 6 மாதத்தில் முழுமையாக மாறியுள்ளது என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.
ஜூலை 2017
2017ஆம் ஆண்டு ஜூலை மாத முடிவில் பணியில் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 405.4 மில்லியனாகக் குறைந்தது சற்று கசப்பான விஷயமாக இருந்தாலும், வேலையைத் தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இதன் எண்ணிக்கை 25.9 மில்லியனாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் இதன் அளவு 13.7 மில்லியனாகக் குறைந்துள்ளது.
புது டிரென்டா..?
சென்டர் பார் மானிடரிங் இந்தியன் எக்னாமி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்க்கும் போது இளைஞர்கள் மத்தியில் வேலையே தேட வேண்டும் என்ற ஆர்வம் அதிகளவில் குறைந்துள்ளது.
இதற்கு என்ன காரணமாக இருக்கும்..?
மத்திய அரசு இந்தியாவில் புதிய மற்றும் முதல்முறை தொழில்முனைவோர்களை உருவாக்கப் பல திட்டங்கள் அறிவித்துள்ளதை அடுத்த ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் கொழுத்துவிட்டு ஏறிந்துக்கொண்டு இருக்கும் சொந்த தொழில் கனவு இதன் மூலம் பெரிய அளவில் வெடித்திருக்கலாம்.
இதில் அரசின் பங்கீடு எவ்வளவும் இருக்கிறது என்பதை விடவும், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்வியும் ஆழமாக எழுகிறது.
வங்கி மற்றும் ஐடி
இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளிப்பது வங்கி மற்றும் ஐடி துறைகளில் தான், கடந்த சில மாதங்களாக இரு துறைகளிலும் பல பணிகள் முழுமையாக ஆட்டோமேஷன் செய்யப்பட்டு இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் இத்துறையில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படாமல் மந்தமாக இருக்கிறது. இது இளைஞர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.
வங்கி இணைப்பு
இந்நிலையில் மத்திய அரசு எஸ்பிஐ வங்கிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்த வகையில் பிற பொதுத்துறை வங்கிகளையும் இணைத்து நாட்டில் வெறும் 4 வங்கிகளை மட்டும் மையமாக வைத்து இயங்கும் வகையில் புதிய திட்டத்தை வடிவமைத்தும் ஆலோசனை செய்தும் வருகிறது.
இந்த வங்கி இணைப்பால் பல வேலைவாய்ப்புகள் தேவையற்றதாக மாறும், இதே நிலைதான் டெலிகாம் துறையிலும் தற்போது நிகழ்ந்து வருகிறது.
திறன் மேம்பாடு
ஐடித்துறையில் புதிய தொழில்நுட்பம் அதிகளவில் தேவைப்படும் காரணத்தால், இளைஞர்கள் வெளிநாடுகளுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டுக்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
புதிய
மத்திய அரசின் திட்டம் வெற்றி அடைந்திருந்தால் கடந்த 7 மாதத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. இதன் மூலம் அரசின் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு திட்டமும் பெரிதாக வெற்றி அடையவில்லை.
மோடியின் வாக்குறுதி..
மோடி பிரதமராகப் பதவியேற்றியதற்கு முன்பு இந்தியாவில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார். தற்போது இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்குக் கூடப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருப்பது நாட்டின் வளர்ச்சியிலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
முடிவு
இதன் மூலம் சந்தையில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால், இளைஞர்களும் புதிய வழிகளைத் தேடி சென்று வருகின்றனர். இதன் காரணமாகவே வேலை தேடுவோர் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்துள்ளது.
வளரும் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குகிறது. இது உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சனை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications