நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 3 மடங்கு அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
லாபம்
கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கி வெறும் 1,046 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்ற நிலையில், ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் 3,032 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
கணிப்புகள்
சந்தைக் கணிப்பின் படி எஸ்பிஐ வங்கி 2,458 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெறும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில், 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபத்தைப் பெற்றும் அசத்தியுள்ளது எஸ்பிஐ வங்கி.
வராக்கடன்
எஸ்பிஐ வங்கியின் மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் வராக்கடன் அளவு இக்காலாண்டில், 1.12 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.88 லட்சம் கோடி ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வராக்கடன் அளவு 9.97 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதேக்காலக்கட்டத்தில் வராக்கடன் அளவு 6 சதவீதம் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வருமானம்
இக்காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானம் 1.8 சதவீதம் குறைந்து 19,323 கோடி ரூபாயாக உள்ளது.
வரி செலவீடுகள்
மேலும் வங்கியின் வரி செலவீகள் அளவு 128.6 சதவீம் உயர்ந்து 1,260.59 கோடி ரூபாயாக உள்ளது.
பங்குகள்
காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கிய இன்று எஸ்பிஐ பங்குகள் 1 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில், காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு இது 4.5 சதவீதம் வரை சரிந்தது. இந்தத் திடீர் சரிவிற்குக் காரணம் வராக்கடன் வளர்ச்சியே.
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து 2 மணியளவில் இண்டஸ்இந்த வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் சரிவுடன் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications