மும்பை: நாட்டின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக வினய் துபே நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் விமான போக்குவரத்து துறையின் ஒப்புதல்கள் அனைத்தும் பெற்றுள்ள நிலையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இந்திய அமெரிக்கரான வினய் நியமனம் மே 30ஆம் தேதியன்று ஜெட்ஏர்வேஸ் நிர்வாகத்தால் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ கார்மல் பால் பிப்ரவரி 2016இல் வெளியேறிய நாள் முதல் இந்நிறுவனம் சிஇஓ இல்லாமல் இயங்கி வருகிறது.
தற்காலிக அதிகாரி
சிஇஓ இல்லாத காலத்தில் தற்காலிகமாக இப்பதவியில் கவு்ரங் ஷெட்டி மற்றும் அமித் அகர்வால் ஆகியோர் இப்பதவில் வகித்தனர்.
வினய் துபே
வினய் இதற்கு முன் டெல்டா ஏர்லையன்ஸ், சபரி இன்க் மற்றும் அமெரிக்கன் ஏர்லையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அமெரிக்க, ஐரோப்பி மற்றும் ஆசிய வர்த்தகத்தில் பணியாற்றியுள்ளார்.
எதிஹாத் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் எதிஹாத் ஏர்வேஸ் உடன் கூட்டணி வைத்தபின்பு இந்நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது. மேலும் இந்திய சந்தையில் அதிகரித்துள்ள போட்டியை சமாளிக்க வினய் துபே மிகப்பெரிய அளவில் உதவியாக இருப்பார் என ஜெட் ஏர்வேஸ் நம்புகிறது.


Click it and Unblock the Notifications