இனி ஆதார் கார்டு இல்லை என்றால் இதை செய்யவே முடியாது?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஆதார் கார்டு நமது வாழ்க்கையில் இன்று முக்கியமான ஒரு ஆவணமாக மாறியுள்ளது. மத்திய அரசு ஆதார் கார்டினை பல இடங்களில் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று கூறி வருகின்றது. விரவில் பங்கு சந்தை முதலீடுகள், வாக்காளர் அடையாள அட்டைக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

இப்படிப் பட்ட சூழலில் நாம் இங்குப் பார்க்க இருக்கும் செயல்பாடுகளுக்கு எல்லாம் ஆதார் இல்லாமல் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு திறக்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வங்கி கணக்கை வைத்துள்ளவர்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் பான் கார்டு போன்று 50,000 ரூபாய்க்கும் அதிகமான அனைத்து நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

 

வருமான வரி தாக்கல்

ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யப் பான் கார்டுடன் ஆதார் கார்டினை இணைத்து இருக்க வேண்டும்.

ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்.. வருமான வரித்துறை அறிவிப்பு..!

 

பான் கார்டு

புதிதாகப் பான் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களால் இனி ஆதார் கார்டு இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது. ஏறகனவே பான் கார்டு பெற்றவர்களும் வருமான வரித்துறை இணையதளத்திற்குச் சென்று இணைப்பைச் செய்ய வேண்டும்.

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?

 

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎப்)

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) கணக்கிற்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இருந்தால் எளிதாக இணையதளம் மூலம் பிஎ பணத்தினைத் திரும்பப் பெற முடியும்.

உஷார்..! இதைச் செய்யவில்லை என்றால் உங்கள் பிஎ பனத்தை இணையம் மூலமாகத் திரும்பப்பெற முடியாது!

 

மொபைல் எண்

புதிதாக மொபைல் எண் வாங்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம். அதே நேரம் ஏற்கனவே மொபைல் எண் வைத்துள்ளவர்களும் 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது மொபைல் எண்ணுக்கு ஆதார் எண்ணை சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித் தொகை

மாணவர்கள் மத்திய அரசிடம் இருந்து உதவிப் பெற மற்றும் பிற நிதி உதவி திட்டங்கள் மூலம் பயனுற ஆதார் கட்டாயம் ஆகும்.

பாஸ்போர்ட்

விமானப் போக்குவரத்துத் துறை பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அதனால் ஆதார் கார்டு இல்லாமல் இனி பாஸ்போர்ட் பெற முடியாது.

ரயில் டிக்கெட் சலுகை

சலுகை விலையில் ரயில் டிக்கெட் பெற்று நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் இல்லை.

மதிய உணவு

அரசுப் பள்ளிகளில் இலவசமாக அளிக்கப்படும் மதிய உணவுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆகும்.

பொது விநியோக அமைப்பு

பொது விநியோக அமைப்பின் மூலம் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பொருட்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் ஆகும். மத்திய மாநில அரசுகளின் அனைத்து பொது விநியோகத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

விரைவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படித் தெரியுமா?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ஆதார், aadhaar
English summary

Without Aadhaar you cannot do this 10 vital things

Without Aadhaar you cannot do this 10 vital things
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns