சர்வதேச சந்தையில் பல விதமான பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் இந்திய சந்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் இதுவரையில் இல்லாத வகையில் வலிமையான நிலையில் உள்ளது.
நிஃப்டி
கடந்த வாரம் மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்றாலும் இது அடுத்தச் சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும், சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஆகஸ்ட் மாதம் வரையில் மந்தமாகத் தான் இருக்கும் அதன் பின் மீண்டும் பட்டையகிளப்பும்.
இதன் மூலம் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் நிஃப்டி குறியீடு 11,500 புள்ளிகளை அடையும் எனக் கணிப்புகள் கூறுகிறது.
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி
இந்திய பொருளாதாரம் தற்போது பங்குச்சந்தை, பத்திர முதலீடு, காமாடிட்டி என அனைத்துப் பிரிவுகளிலும் வளர்ந்து வரும் காரணத்தால் ஒன்றைமட்டும் நம்பியிருக்கும் மோசமான நிலையில் இருந்து இந்தியா தப்பியுள்ளது.
புதிய பாதை
இதன் வாயிலாக இந்தியா பொருளாதாரம் வலிமையான பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது என்பது முழுமையாகத் தெரிகிறது.
அரசு பத்திரங்கள்
இந்தியாவில் பணமதிப்பிழப்புக்குப் பின் நுகர்வோர் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மேலும் அரசு சார்ந்த துறைகளான ரயில்வே, சாலைகள், மின் பரிமாற்றம், ஆகிய துறைகளில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகளவிலான முதலீடு தேவை இருப்பதால் அரசு பத்திரங்கள் மீதான முதலீடு அதிகரிக்கும் என உறுதியாகத் தெரிகிறது.
பங்குச்சந்தை உயர்வு
நாட்டின் குறைவான பணவீக்கம், லாபகரமான சூழ்நிலை, சேமிப்பில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு ஆகியவை மும்பை பங்குச்சந்தை உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications