தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப் புதிய விதிகள்.. டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணம் செலுத்துவத

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தினைச் செலுத்தும் முறையினை அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்தது.

இந்த முறையினை இணையதளம், செயலி என ஐஆர்சிடிசி சேவையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பெறலாம். தட்கல் டிக்கெட் என்பது கடைசி நேரத்தில் வெளியூர் செல்ல முடிவு செய்தவர்கள் ஒரு நாள் முன்பு முன்கூடியே புக் செய்யப்படும் டிக்கெட் ஆகும்.

மேலும் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது அடையாள எண் குறிப்பிட வேண்டும் என்றும் பயணம் செய்யும் போது அதனைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

எனவே தட்கல் ரயில் டிக்கெட் பற்றிய முழு விவரங்களை இங்குக் காணலாம்.

எல்லாம் பொய்

எல்லாம் பொய்

2017-ம் ஆண்டு முதல் ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் புக் செய்யப் புதிய கட்டணம் முறை என்று குறியது எல்லாம் பொய் என்றும் ஆதாரம் இல்லாத தகவல் என்றும் ஐஆர்சிடிசி நிர்வாகம் கூறியுள்ளது. இது ரயில் பயணிகள் இடையில் பல குலப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான காலம்

தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான காலம்

தட்கல் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான நேரங்கள் 2015-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் படி ஏசி டிக்கெகள் காலை 10:00 முதலும், ஏசி இல்லாத தட்கல் டிக்கெட் 11:00 முதலும் புக் செய்ய முடியும். இந்த நேரத்தில் செயலி மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

ரத்து செய்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது

ரத்து செய்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது

தட்கல் முறையில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது ரத்து செய்தால் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதில் எந்த மாற்றமும் தற்போது இல்லை.

 இரண்டு பணம் செலுத்தும் முறை

இரண்டு பணம் செலுத்தும் முறை

அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் இரண்டு புதிய பணம் செலுத்தும் முறையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுப் பிரிவு டிக்கெட் புக் செய்யும் போது கட்டணம் செலுத்தலாம்.

இ-பேலேட்டர்

இ-பேலேட்டர்

இந்த இ-பேலேட்டர் முறையில் பணத்தினைச் செலுத்தும் முறையினை அர்த்தஹஸ்தரா ஃபிண்டெக் நிறுவனம் வழங்குகின்றது.

கூடுதல் செலவு எவ்வளவு

கூடுதல் செலவு எவ்வளவு

இ-பேலேட்டர் சேவையினைப் பயன்படுத்தி முன்கூடியே டிக்கெட் புக் செய்த பிறகு டிக்கெட் கட்டணத்தினைத் திருப்பிச் செலுத்தும் பொது 3.50 சதவீத டிக்கெட் கட்டணட்தினை கூடுதலாக வரியுடன் செலுத்த வேண்டும். இதனைப் பயன்படுத்தி மக்கள் பயன்பெற இணையதளத்தில் டிக்கெட் செய்யும் போது இதன் விவரங்கள் மற்றும் தேர்வு செய்யும் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பே ஆன் டெலிவரி

பே ஆன் டெலிவரி

இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது எப்படி டெபிட், கிரெடிட், இணையதள வங்கி சேவையின் மூலம் டிக்கெட் புக் செய்வது பொன்றே பே ஆன் டெலிவரி சேவையிலும் கட்டணம் செலுத்த முடியும்.

புக் நவ் பே லேட்டர்

புக் நவ் பே லேட்டர்

புக் நவ் பே லேட்டல் முறையில் டிக்கெட் புக் செய்த 24 மணி நேரத்தில் பயணம் செய்யும் போது மின்னஞ்சலுக்கு வரும் இணைப்பை கிளிக் செய்து பணத்தினைச் செலுத்தலாம். டிக்கெட் ரத்துச் செய்தாலும் ரத்துச் செய்ததற்கான கட்டணத்தினைச் செலுத்த வேண்டும்.

ரத்துக் கட்டணம் எவ்வளவு இருக்கும்

ரத்துக் கட்டணம் எவ்வளவு இருக்கும்

புக் நவ் பே லேட்டர் சேவையில் புக் செய்த டிக்கெட்டினை ரத்து செய்யும் போது 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒருவேலைச் செலுத்த மறுத்தால் உங்களது ஐஆர்சிடிசி கணக்கு நீக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+