நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் மக்களவையில் ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பு பற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது ஆதார் பான் இணைப்பினை செய்யக் கடைசித் தேதி ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இது இணைப்பைச் செய்யாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக இருந்தாலும் இணைப்பை செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
வாருமான வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி என ஜூலை 31-ம் தேதி வரை கடைசித் தேதி என வருமான வரித்துறை அறிவித்தது. அதே நேரம் ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ஆதார், பான் இணைப்புக் கட்டாயம் என்று அறிவித்து இருந்தது.
பின்னர் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான கடைசி
தேதியை 5 நாட்கள் நீட்டித்து ஆகஸ்ட்5-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தது.
குழப்பம்
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பைச் செய்யக் கடைசித் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி எனவும் அறிவித்தது. இப்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இணைப்பைச் செய்யக் கடைசித் தேதி ஒன்றும் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதில் தான் குழப்பம் எழுந்துள்ளது.
எதனால் இணைப்பு எளிது
வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பைச் செய்திருந்தால் இ-சரிபார்ப்பு மூலம் ஒப்புகை செய்வது எளிதாகும். எனவே ஆதார் எண்ணை வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிடுவது நல்லது.
யாருக்கெல்லாம் ஆகஸ்ட் 31 கடைசித் தேதி
ஏற்கனவே இணைப்பைச் செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ஆதார், பான் இணைப்பை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
என்ன சிக்கல் எல்லாம் சந்திக்க நேரிடும்?
ஆதார், பான் இணைப்பைச் செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் இணைப்பைச் செய்யவில்லை என்றால் அவர்களது வரி தாக்கல் செயல்படுத்தப்பட மாட்டாது. இணைப்பை செய்த பிறகும் தான் செயல்படுத்தப்படும். அதனால் உங்களுக்குக் கிடைக்கக் கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரி, டிடிஎஸ் உள்ளிட்டவற்றைப் பெற முடியாது.
பான் கார்டு, ஆதார் கார்டு பயனர்கள் எண்ணிக்கை
ஜூன 28-ம் தேதி வரையிலான தரவை வைத்துப் பார்க்கும் போது 111 கோடி நபர்கள் ஆதார் கார்டு பெற்றுள்ள நிலையில் 25 கோடி நபர்கள் மட்டுமே பான் கார்டு வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்எம்எஸ்
நிமிடங்களில் ஆதார் உடன் பான்
கடைசி தேதி அறிவிப்பு..!
'வெற்றி' நிச்சயம்
விசிடிங் கார்டு
சதீஷ் குமார்
சூப்பரான வழி
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications