வெளிநாடு சென்றுள்ள இந்தியர்கள், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய என்னவெல்லாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன மாதிரியான ஆவணங்கள் எல்லாம் தேவை என்ற விவரங்களை இங்கு உங்களுக்காக வழங்க இருக்கின்றோம்.
பல முதலீடு திட்டங்களில் என்ஆர்ஐ-களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யச் சலுகைகள் அளிக்கப்பட்டாலும் பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்வது என்பது பற்றி உங்கு பார்ப்போம்.
ஆணையாளரை நியமித்தல்
என்ஆர்ஐ இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் என்ஆர்ஈ வங்கி கணக்கை துவங்க வேண்டும். ஆணையாளரை நியமிக்கும் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆணையாளரின் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கையெழுத்து ஸ்பெசிமென் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கணக்கை நிர்வகிக்க வேண்டிய ஆணையாளர் படிவத்தில் கையெழுத்தை இட வேண்டும். என்ஆர்ஈ கணக்கை நிர்வகிக்கப் பதிவு செய்யப்பட்ட உடன் செக் பெறுதல், சிக் விநியோகித்தல், பணம் செலுத்துதல், ஏடிஎம் கார்டு பயன்படுத்தல் மற்றும் வங்கி கணக்கில் பணத்தை வைப்பது போன்றவற்றை என்ஆர்ஐ செய்ய முடியும்.
அங்கீகாரம் பெற்ற நபர்
என்ஆர்ஐ கணக்கை நிர்வகிக்க அங்கீகாரம் பெற்ற நபர் ஒருவரை நியமிக்க முடியும். என்ஆர்ஐ-க்கு பதிலாக அங்கிகாரம் பெற்ற நபராலும் கணக்கை நிர்வகிக்க முடியும்.
இதற்காக அங்கிகாரம் பெற்ற நபர் தேவையான ஸ்டாம் பேப்பர் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும், மற்றும் எதற்காக ஆங்கிகாரம் பெற்ற நபராக நியமிக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அங்கிகாரம் பெற்ற நபரால் முதலீடுகளைச் செய்ய முடியும், என்ஆர்ஐ-க்கு பதிலாக அனைத்துத் தேவையான ஆவணப் பனிகளையும் இவரால் செய்ய முடியும்.
இணையதள முதலீடு
அங்கிகாரம் பெற்ற நபரை நியமிப்பதற்குப் பதிலாக இணையதள வங்கி சேவை மூலமாகவும் முதலீட்டைத் தொடர்ந்து என்ஆர்ஐ முதலீட்டாளரால் செய்ய முடியும். இதற்காகப் பல புரோக்கர் நிறுவனங்கள் இணையதள டிரேடிங் கணக்கை அளிக்கின்றனர்.
முக்கியக் குறிப்புகள்
என்ஆர்ஐ கணக்கு வைத்துள்ளவர்கள் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு ஒன்றை நிர்வகிக்க வேண்டும். முதலீடு செய்யும் பொது அங்கிகாரம் பெற்ற நபருக்கான தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். என்ஆர்ஐ-க்கு அவர்கள் இருக்கும் நாடுகளில் உள்ள நேரங்கள் தான் பெறும் சிக்கலாக இருக்கும்.
'வெற்றி' நிச்சயம்
விசிடிங் கார்டு
சதீஷ் குமார்


Click it and Unblock the Notifications