மும்பை: இந்திய டெலிகாம் துறையில் இருக்கும் இண்டர்கனெக்ஷன் யூசேஜ் சார்ஜ் அளவை டெலிகாம் கட்டுப்பட்டு ஆணையமான செபி பலகட்ட ஆலோசனைக்குப் பின் அதனைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
டிராய் அமைப்பின் இந்த முடிவு பார்தி ஏர்டெல், ஐடியா ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை அதிகளவில் பாதிக்கும் போது ரிலையன்ஸ் ஜியோ-விற்கு இந்த அறிவிப்பின் மூலம் கூடுதல் லாபத்தை அளிக்கிறது என்பதே அதிர்ச்சியான விஷயம்.
இண்டர்கனெக்ஷன் யூசேஜ் சார்ஜ்
ஐயூசி கட்டணம் என்பது அழைப்பு உருவாகும் டெலிகாம் நிறுவனம், அழைப்பை ஏற்கும் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய கட்டணமாகும்.
தற்போது இந்தக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 14 பைசாவாக இருக்கும் நிலையிஸ், டிராய் அமைப்பு இதன் கட்டணத்தைக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்தப் பணிகள் கடந்த மாதமே துவங்கிவிட்ட நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில் இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும்.
கட்டண குறைப்பு
கடந்தமாதம் டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜியோ இண்டர்கனெக்ஷன் யூசேஜ் கட்டணத்தைக் குறைக்கும் கோரிக்கை முன்வைத்தது.
கோரிக்கையை முன்வைக்கும்போதே அனைத்து நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
லாபத்தில் சரிவு
ஐயூசி கட்டணத்தைக் குறைத்தால் ஏர்டெல் நிறுவனத்தின் லாபத்தில் 4 சதவீதம் பாதிக்கும், அதேபோல் ஐடியா-வின் லாபம் 9 சதவீதம் வரை குறையும். இது கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 5 பைசாவாகக் குறைத்தால் ஏற்படும் பாதிப்புகள்.
மொத்தமாக நீக்கிவிட்டால், இது ஏர்டெல் 6 சதவீதமும், ஐடியா 15 சதவீத லாபத்தை இழக்கும். ஜியோ பரிந்துரைப்பதும் ஜிரோ ஐயூசி கட்டணத்தைத் தான்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் முழுமையான டெலிகாம் டவர்கள் இல்லாத காரணத்தாலும், இலவச அழைப்புகள் இருக்கும் காரணத்தாலும், ஐயூசி கட்டணத்தின் வாயிலாக அதிகப்படியான லாபத்தை இழந்து வருகிறது.
ஜியோவின் அழைப்புகள் அனைத்திற்கும் ஜியோ பிற டெலிகாம் நிறுவனங்களுக்குக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இது குறைந்தாலோ, அல்லது முழுமையாக நீக்கப்பட்டாலோ ஜியோவிற்கு ஜாக்பாட் தான்.
லாபம்..
ஐயூசி கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 8 பைசாவாக டிராய் குறைத்தால், ஜியோ ஒரு வாடிக்கையாளருக்கு 25-30 ரூபாய் வரையிலான கூடுதல் லாபத்தைப் பெற்ற முடியும்.
உக்தி..
இது ஜியோ எவ்விதமான சலுகை ஆஃபர்கள் அளிக்காமல் கூடுதலாகப் பெறும் வருமானம் இது. ஆனால் டிராய்-யின் இந்த அறிவிப்பால் பிற நிறுவனங்களின் லாபம் மற்றும் வருவாய் அதிகளவில் பாதிப்பு ஏற்படும்.
எனவே டிராய் இரண்டு பக்கமும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் டவர் வைப்பதில் மட்டுமே பல ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளது. இதை எதையுமே செய்யாமல் ஜியோ பயன்படுத்திக்கொள்வது முற்றிலும் தவறு.
மக்கள் வரவேற்பு
குறைத்த கட்டணத்தில் மாதம் முழுவதும் இலவச அழைப்புகள், அதிவேக இண்டர்நெட் டேட்டா அனைத்தையும் ஜியோ அளிப்பதால் இந்நிறுவனத்திற்கு மக்கள் வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
ஜியோ-வில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..
அம்பானிக்கு குட்டு வைக்க வரும் ஐடியா
4ஜி பியூச்சர் போன்
ஜியோ கோரிக்கைக்கு எதிர்ப்பு.
'வெற்றி' நிச்சயம்
விசிடிங் கார்டு
சதீஷ் குமார்
சூப்பரான வழி
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications