சென்னை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ அறிமுகம் செய்த நாள் முதல் தொடர்ந்து அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களை மளமளவெனச் சேர்த்து அசத்தி வருகிறது.
ஜியோவின் இந்த திடீர் வளர்ச்சியின் காரணமாக ஏர்டெல் நிறுவனம் பல மோசமான சூழ்நிலையை சந்தித்தது நாம் மறுக்க முடியாது. ஜியோ நிறுவனம் மொத்த டெலிகாம் நிறுவனத்தையே சுழற்றி அடித்தாலும் ஏர்டெல் அசராமல் நிற்கிறது.
பார்தி ஏர்டெல்
வருவாய், லாபம் என அனைத்திலும் ஏர்டெல் சரிவை கண்டாலும் 2017ஆம் ஆண்டில் மட்டும் ஏர்டெல் நிறுவன பங்குகள் சுமார் 33.03 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
மார்ச் காலாண்டில் 72 சதவீதமும், ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 74.89 சதவீதம் சரிந்தது.
இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் ஏர்டெல் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறையவில்லை. இதன் காரணமாகவே ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் இத்தகைய பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
சென்செக்ஸ்
இக்காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 19 சதவீதம் மட்டும் உயர்ந்த நிலையில், ஏர்டெல் 33 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை காப்பாற்றியுள்ளது.
விற்பனை
முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் பாங்க் ஆஃப் அமெரிக்கா - மிரிலி லின்ச் சந்தை ஆய்வு நிறுவனமும் இன்று வரை ஏர்டெல் நிறுவழத்திழ் பங்கை வாங்க முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.
12 மாதம்
மேலும் சந்தை கணிப்புகளின் படி அடித்த 12 மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 480 ரூபாய் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் தொடர்ந்து இந்நிறுவனத்தைக் கண்காணிப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications