அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் குறித்த போட்ட ஒரு டிவிட்டால் 5.7 பில்லியன் டாலர் அதாவது 570 கோடி டாலர்கள் மதிப்பினை நிறுவனம் இழந்துள்ளது.
டிரம்ப் அவர்கள் புதன்கிழமை வெளியிட்ட ஒரு டிவிட்டில் எமேசான் நிறுவனம் வரி செலுத்தும் சில்லறை வியாபாரிகளை அமேசான் பரிய அளவில் பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
அமேசான் நிறுவனத்தின் தாக்கம்
மேலும் பல சிறு நகரங்கள், நகரங்கள் மற்றும் மாநிலங்களில் அமேசான் நிறுவனம் அமெரிக்கர்களின் வேலையினைப் பரித்தும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ஜெஃப் பெஸோஸ் மீது விமர்சனம்
வாஷிங்டன் போஸ்ட்டின் உரிமையாளர் மற்றும் அமேசான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃ பெஸோஸை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
டிவிட் அடுத்து ஏற்பட்ட நட்டம்
டிரம்ப் அவர்களின் டிவிட்டினை அடுத்து அமேசான் நிறுவனப் பங்குகள் 1.2 சதவிகிதம் அளவிற்கு இரண்டு மணி நேரத்தில் சரிந்தது. இதன் மதிப்பு 2000 கோடி டாலர்கள் ஆகும்.
சந்தைத் துவங்கிய உடன் அமேசான் நிறுவனப் பங்குகள் சற்று உயர்ந்து 0.33 சதவிகிதம் சரிவை சந்தித்தது. இதன் மதிப்பு 570 கோடி அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இத்தன்மதிப்புத் தோராயமாக ரூ.36 ஆயிரம் கோடியாகும்.
வரி செலுத்தும் முறை
வாடிக்கையாளர்களிடமிருந்து விற்பனை வரியை வசூல் செய்யும் முறை ஆகிய காரணங்களுக்காக இந்தியா உட்பட உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமேசான் நிறுவனம் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
சில்லறை வியாபாரிகள்
அமேசான் நிறுவனத்தின் இணையதள ஷாப்பிங் முறையினால் பல சில்லறை வியாபாரிகள் தங்களது கடைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பணிக்கு ஆட்கள் எடுப்பு
அதே நேரம் 100,000 நபர்களைச் சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பணிக்கு எடுக்க இருப்பதாகவும், இதற்காக நாடு முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த இருப்பதாகவும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிரடி நடவடிக்கைகள்
புதன்கிழமை, டிரம்ப் இரண்டு முக்கிய வர்த்தக ஆலோசனைக் குழுக்களை முடக்கியதுடன், வர்ஜீனியாவில் வன்முறை எதிர்ப்பு ஆர்வலர்கள் மற்றும் வெள்ளை தேசியவாதிகள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினை அடுத்துப் பல முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயியும் ஒருவர் ஆவார்.
புதிதாகப் பணியில் அமர்த்த அமேசான் முடிவு..!
பில் கேட்ஸ் உடன் போட்டி
அமேசான் டெலிவரி செய்யும்..!
புதிய அலுவலகத்தை அமைக்கும் அமேசான்


Click it and Unblock the Notifications