தனியார் வங்கி சேவையில் இரண்டாம் இடத்தில் எச்டிஎப்சி வங்கி வியாழக்கிழமை சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி விகிதத்தினை 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
எஸ்பிஐ, ஆக்சிஸ், பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்டவை ஏற்கனவே சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளது.
4 சதவீதம் வட்டி விகிதம்
எச்டிஎப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்து இருந்தால் 4 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படும்.
3.5 சதவீதம் வட்டி விகிதம்
இதுவே ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகப் பரிவர்த்தனை செய்து இருந்தால் 0.50 சதவீதம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு 3.5 சதவீதம் வழங்கப்படும்.
எப்போது முதல் மறுசீர் அமைக்கப்பட்ட வட்டி விகிதம்
மறுசீர் அமைக்கப்பட்ட வட்டி விகிதம் இந்திய குடியுரிமை பெற்றவர்கள், என்ஆர்ஐ என அனைவருக்கும் 2017 ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
சேமிப்புக் கணக்குகள்
நிதி ஆலோசகர்கள் அதிகப்படியான தொகையினைச் சேமிப்புக் கணக்குகளில் வைத்து இருப்பது நல்லதல்ல. லிக்விட் மியூச்சுவல் ஃபண்டு போன்ற மாற்றுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதி திட்டம், கடன் பத்திர திட்டம் போன்றவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஒழுங்குமுறை நிதி திட்டங்கள்
ஒழுங்குமுறை நிதி திட்டங்கள் முக்கியமாகக் கூப்பன் மூலம் பெற்ற வருவாய் அல்லது வட்டி விகித லாபம் பெறுவதன் மூலம் வட்டி வருவாயைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications