ஆட்டோமேஷன், குறைந்த அளவிலான வளர்ச்சி, புதிய தொழில்நுட்ப சேவைக்கு மாற்றம் எனப் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள், முதலீட்டாளர்களையும் பங்குதாரர்களையும் மிகழ்விக்க நிறுவனத்தின் செலவை குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது.
இதனால் பல ஊழியர்களைப் பணியை இழந்து தவித்து வந்த அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
புதிய வேலைவாய்ப்புகள்
இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது மட்டும் அல்லாமல், பணியில் இருக்கும் ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது.
ஆனால் பன்னாட்டு டெக்னாலஜி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது.
ஆக்சென்சர்
சிடிஎஸ் நிறுவனத்தைப் போலவே ஆக்சென்சர் நிறுவனம் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை இந்தியாவில் வைத்து தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வருடம் மட்டும் சுமார் 5,396 ஊழியர்களை இந்தியாவில் பணியில் அமர்த்த உள்ளது. இது அமெரிக்கா விட 4 மடங்கும், போலாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளை விட 12 மடங்கு அதிக வேலைவாய்ப்புகளாகும்.
கேப்ஜெமினி
பிரான்ஸ் நாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி இந்தியாவில் மட்டும் சுமார் 2,649 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய வேலைவாய்ப்புகளில் 55 சதவீதம் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரக்கிள்
சமீபத்தில் இந்தியாவில் புதிய டேட்டா சென்டரை அமைக்கத் திட்டமிட்டு வரும் ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் 1,124 புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
அமேசான்
பிளிப்கார்ட் உடன் போட்டிபோட்டு வரும் அமேசான் நிறுவனம் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதால் புதிதாக 1,208 வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கியுள்ளது அமேசான்.
பிற நிறுவனங்கள்
இதேபோல் பல பன்னாட்டு டெக்னாலஜி நிறுவனங்கள் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த அலையில் வரும் பிற நிறுவனங்களின் பட்டியல்
ஐபிஎம் - 675 வேலைவாய்ப்புகள்
கோல்டுமேன் சாச்சீஸ்- 320 வேலைவாய்ப்புகள்
டெல் - 285 வேலைவாய்ப்புகள்
மைக்ரோசாப்ட் - 235 வேலைவாய்ப்புகள்
சிஸ்கோ - 229 வேலைவாய்ப்புகள்
சோசைடி ஜெனிராலி - 185 வேலைவாய்ப்புகள்
வளர்ச்சி
பன்னாட்டு நிறுவனங்களின் குளோபல் இன்ஹவுஸ் சென்டர் (GIC) மூலம் இந்தியாவில் சுமார் 7,70,00 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்த வரும் இதன் எண்ணிக்கையில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
அடுத்த இரு காலாண்டுகளுக்கு இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் காக்னிசென்ட் (அமெரிக்க நிறுவனம்) ஆகியவற்றில் பிரஷ்ஷர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் காத்துகிடக்கிறது.
அனுபவ பெற்ற அதிகாரிகளை வெளியேற்றி வரும் இத்தகைய சூழ்நிலையில் இப்பிரிவின் கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்களில் வாய்ப்புகள் குறைவே.
செக்
இந்திய ஐடி நிறுவனங்களின் தற்போதைய மோசமான நிலையை பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு அதிகளவிலான ஊழியர்கள் மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகத்தையும் பெற திட்டமிட்டு வருகிறது.
இந்திய ஐடி நிறுவனங்களில் நிலவும் இந்த மோசமான நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது தனது சாராசரி அளவை விடவும் குறைவான சம்பளத்திலேயே வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இது வர்த்தகம் மற்றும் லாபம் ஆகிய இரு வழிகளிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம். இந்த சூழ்நிலையை உருவாக்கியதிற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் தான் காரணம் என்றால் மிகையாகாது.
பிக் பாஸ் ஆர்வ்
புதிய வரி..!
எஸ்பிஐ
ஜியோவிற்கு யோகம்
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications