இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தின் தரவுகளை அதிகரிப்பது, தொலைத்தொடர்பு துறையில் புதிய நிறுவனங்களை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் வாலெட்டுகளை அறிமுகம் செய்தல் மற்றும் தொழிற்நுட்பத்திற்கான தேவையினை அதிகரிப்பது மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துனர்களின் வளர்ச்சி போன்றவற்றால் வேலை வாய்ப்புகள் 2018-ம் ஆண்டு 20 லட்சம் நபர்களுக்குக் கிடைக்கும் என்று ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன.
இதுவே 2021-ம் ஆண்டு 5ஜி, எம்2எம் வருகையினால் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 8,70,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை
தற்போது இந்தத் துறையில் இருப்பதினை விட மனிதவளத்திற்கான தேவை அதிகளவில் இருக்கும் என்றும் அதிலும் இதைச் சார்ந்த திறன் வைத்துள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
புதுப்பிப்புகளைப் புகுத்த வேண்டும்
ஒருபுறம், சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், பயன்பாட்டு டெவலப்பர்கள், விற்பனை நிர்வாகிகள், உள்கட்டமைப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள், கைப்பேசி தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு பாத்திரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மனிதவளத்தை அடையாளப்படுத்த வேண்டிய திறமை உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களில் பணிபுரியும் மனிதவள மேம்பாட்டிற்கான புதுப்பிப்புகளை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
திறமைசார் கவுன்சில்
டெலிகாம் துறையின் திறமைசார் கவுன்சில் டெலிகாம் துறையின் கோரிக்கைகளையும் திறன் தேவைகளையும் பூர்த்திச் செய்ய அமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆனாலும் இந்தத் துறைக்குத் தேவையான குறிப்பிட்ட திறனை வளர்த்துக்கொள்வது, தற்போதுள்ள மனிதவள சக்தி திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக இடையறாத வளர்ச்சியை உறுதி செய்கின்றது.
தொலைத்தொடர்பு துறையின் பங்களிப்பு
கடந்த சில ஆண்டுகளில், வாடிக்கையாளர்கள் அளவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு துறையின் பங்களிப்பு 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், வருவாய் முன்னேற்றம் 7.07 சதவீதமாக உள்ளதாகச் சிகர்(CAGR) அறிக்கை தெரிவித்துள்ளது.
முதலீடு
டிஎஸ்பி (தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்) தங்களது நெட்வொர்க்குகளில் முதலீடு செய்த கட்டமைப்பினை நவீனமயமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். 2017-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 85,003 கோடி வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
வருவாய்
அதே நேரம் பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வருவாய் பல மடங்கு சரிந்துள்ளதாகவும் கூறிவருகின்றன. 6000 கோடி ரூபாய் வருவாய் பெற்று 900 கோடி ரூபாய் வரை தான் வருவாய்ப் பெற்றுள்ளதாகச் சில நிறுவனங்கள் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications