சென்ற ஆண்டுப் பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதனை அடுத்து புதிய 500 மற்றும் 2,00ஒ ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. மேலும் புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
அது இப்போது உறுதியாகியுள்ளது. ஒருபக்கம் புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இப்போது புதிய 50 ரூபாய் நோட்டு கட்டுகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமுக வலைத்தளங்கள்
சமுக வலைத்தளங்களில் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ள புதிய 50 ரூபாய் நோட்டுகள் பற்றி அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
வெளிறிய டர்க்கைஸ் நிறம்
வெளிறிய டர்க்கைஸ் நிறத்தில் இருக்கும் புதிய 50 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருக்கும் அதே மதிப்புடைய நோட்டுகளுடன் ஒப்பிடுகையில் சிறிது மாற்றமாக உள்ளது.
புதிய 50 ரூபாய் நோட்டு
புதிய 50 ரூபாய் நோட்டு 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசையில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையெழுத்துடன் உள்ளது.
எனவே விரைவில் ஆர்பிஐ புதிய 50 ரூபாய் நோட்டினை புழக்கத்திற்கு விடும் என்றும், 005-ம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசையில், எண் பேனல் உள்ளீடுகள் இல்லாமல், உர்ஜித் படேல் கவர்னர் கையெழுத்துடன் 2016-ம் ஆண்டு என அச்சடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும் என்று உர்ட்ஜித் படேல் அவர்கள் என்று ஆண்டுத் தெரிவித்து இருந்தார்.
அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் அறிவிப்பும் இல்லை
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் ஏதும் இந்த ரூபாய் நோட்டு குறித்து வெளியாகாத நிலையில் சமுக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள இந்தப் படம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சென்ற ஆண்டு வெளியிட்ட ஆர்பிஐ வங்கியின் அறிவிப்பில் புதிய 50 ரூபாய் நோட்டு நடைமுறையில் இருப்பது போன்று இருக்கும் என்று கூறியது.
தென் இந்திய கோவில்
ரூபாய் நோட்டுகள் பின் புற உள்ள படத்தில் இந்த முறை தென் இந்திய கோவில்கள் இடம் பெறும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது குறித்து எந்தக் கருத்தும் கூற முடியாது.
பண மதிப்பு நீக்கம்
சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கிய பிறகு புதிய 500 ரூபாய் நோட்டினை கல் சாம்பல் நிறத்திலும், 2000 ரூபாய் நோட்டினை ஊதா வண்ணத்திலும் வெளியிட்டது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications