இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விஷால் ஷிக்கா விலக இவை தான் காரணங்கள்!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த 3 ஆண்டுகளை நிறைவேற்றியதனை அடுத்து விஷால் ஷிக்கா தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியதில் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் மற்றும் இணை நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையில் இவருக்கு ஏற்பட்ட உச்சநிலை சண்டை தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

விஷால் சிக்கா அவர்கள் முன்பு பணி புரிந்து வந்த சேப் நிறுவனத்தில் இருந்து 16 மூத்த அதிகாரிகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இதில் பலர் ஷிக்காவின் திட்டத்தின் கீழ் பணிக்கு எடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

மதிப்புச் சரிவு

மதிப்புச் சரிவு

விஷால் ஷிக்கா பதவி ஏற்ற பிறகு 10 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்துச் சரிவை சந்தித்துள்ளது.

வணிகம் மற்றும் உழைப்பு

வணிகம் மற்றும் உழைப்பு

பாரம்பரிய வணிகத்தைப் புதுப்பிக்கவும், கிளவுட், AI / மெஷின் லார்னிங், பகுப்பாய்வு, பெரிய தரவு மற்றும் இணைய-மின்-பொருட்கள் போன்ற புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சுற்றி புதிய வியாபாரங்களை உருவாக்கவும் ஷிக்கா கடுமையாக உழைத்துள்ளார்.

 ஷிக்காவின் சம்பளம்

ஷிக்காவின் சம்பளம்

சென்ற ஆண்டு இறுதியில் விஷால் சிக்காவின் சம்பள உயர்வு மிகப்பெரிய காரணம். சம்பளமாகப் பெறுவதைக் குறைத்துக்கொண்டு பங்குகளாகப் பெற்றுவந்தது விவாதிக்குற்பட்டது. இதனை அடுத்து மூத்த அதிகாரிகளுக்குப் பங்குகள் அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பன்சாலின் சம்பளம்

பன்சாலின் சம்பளம்

முன்னாள் சிஎஃப்ஓ ராஜிவ் பன்சால் ரூ. 17.4 கோடி சம்பளம் பெற்றதும் காரணமாக உள்ளது. நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினர்களின் வேலை ஒப்பந்தங்கள், ஒரு தனித்தனி பிரிவு, மற்றும் அத்தகைய உட்பிரிவுகள் பங்கு வகிக்கும் சிக்கலான தன்மை மற்றும் நாட்டின் குறிப்பிட்ட விதிமுறைகளால் வழிநடத்தப்படுகின்றன என நிறுவனம் கூறுகிறது.

புனிதா சின்ஹா நியமனம்

புனிதா சின்ஹா நியமனம்

முன்னால் நிதி அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் மனைவி நிதிஷா சின்ஹா கடந்த ஆண்டுச் சுய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இது நியமனம் நிறுவகர்களுடன் கோபத்தினை அதிகரித்தது, ஆனால் அந்தப் பணிக்கு அவர் தகுதி வாய்ந்த தகுதி வாய்ந்தவர் என விஷால் கூறினார்.

 கையகப்படுத்துதல் மூலம் வளர்ச்சி

கையகப்படுத்துதல் மூலம் வளர்ச்சி

சிக்கா அவர்கள் இந்திய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு, உள்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் பிபிஓவின் பழைய தொழில்கள் குறைந்து வருவதால் இந்தத் துறைகளை மெருகேற்றி புதுப்பித்துச் சேவைகளை வழங்க வேண்டும் என்று நம்பினார். இதற்குப் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்ற சூழலில் சில இணை நிறுவனர்கள் ஆதரவாக இல்லை.

விசாரணை அறிக்கைகள்

விசாரணை அறிக்கைகள்

அன்மையில் குழு உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்கள் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்துப் பல முடிவுகள் மீது விசாரணை நடைபெற்றது. அந்த விசாரனை அறிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் நேஉ நாராயண மூர்த்தி அவர்கள் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அந்த விசாரணை அறிக்கையில் 200 மில்லியன் டாலர் கொடுத்து பனாய நிறுவனத்தினை வாங்கியது, முன்னா சிஎஃப்ஓ ராஜிவ் பன்சால் சம்பளம், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்காவால் பாலோ ஆல்ட்டோவில் ஏற்பட்ட மிகப்பெரிய செலவினங்கள் குறிப்பிடப்பட்டு இருந்து எல்லாம் விஷால் ஷிக்கா அவர்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+