இன்ஃபோசிஸ் நிறுவனம் விஷால் ஷிக்கா அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனர் நாராயண மூர்த்தித் தலைமையிலான பேர்டு குழுவிற்கும் அதன் இணை நிறுவனர்கள் இடையில் நடைபெற்ற விவாதத்தில் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
இதனால் இடைக்காலத்தில் யார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை நிர்வகிக்கப் போவது , விஷால் சிக்கா என்ன செய்யப் போகிறார் என்ற முழு விவரங்களையும் இங்குப் பார்ப்போம்.

இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைத் தற்போது தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பிரவின் ராவ் கவமிப்பார் என்று பெங்களூரை தலைமியிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்ஃபோசொஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதனை அடுத்து விஷால் ஷிக்கா அவர்கள் இனி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை தலைவராக நீட்டிக்கப்படுவார் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் டிசிஎஸ் போன்று டாடா குழுமம் போன்று தனது நிறுவனத்தினை மாற்றி அமைக்கும் என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications