இந்திய தனியார் வங்கி சேவையில் மிகப் பெரிய வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வெள்ளிக்கிழமை சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் வரை குறைத்து 3.5 சதவீதமாக அறிவித்துள்ளது. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகப் பரிவர்த்தனை செய்து இருந்தால் மட்டுமே 3.5 சதவீதம்.

இதுவே 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்தவர்களுக்கு 4 சதவீதம் வரை சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் அளிக்கப்படும். ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு இந்த வட்டி விகிதம் சனிக்கிழமை அதாவது 19/08/2017 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
முதன் முதலாக ஜூலை 31-ம் தேதி எஸ்பிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 4 சதவீதமும், குறைவாகப் பரிவர்த்தனை செய்தவர்களுக்கு 3.5 சதவீதம் ஆக வட்டி விகிதம் அளிக்கப்படும்.
எச்டிஎப்சி வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவையும் சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளன.


Click it and Unblock the Notifications