இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் ஷிக்கா ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை காலை 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
விஷால் ஷிக்கா ராஜினாமாவிற்கு நிறுவனர் நாராயண மூர்த்தித் தவறாக வழிநடத்தியது தான் என்றும் இன்ஃபோசிஸ் நிர்வாகம் கூறிவருகின்றது.
பங்குகளைத் திரும்ப வாங்குதல்
இன்ஃபோசிஸ் நிறுவனம் 11,30,43,478 கொடி பங்குகளை 4.92 சதவீதம் வரை கூடுதலாகச் செலுத்தி பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. எனவே ஒரு பங்கின் விலை 1,150 ரூபாய் என இன்ஃபோசிஸ் நிறுவனம் வாங்கும் என்று கூறப்படுகின்றது.
பங்கின் தற்போதைய விலை
பைபேக் திட்டம் மூலம் பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மொத்த அளவு 20.51 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் பங்கு சந்தை முடியும் போது 923.10 ரூபாயாக ஒரு பங்கின் விலை சரிந்து காணப்பட்டது.
பிரீமியம் விலை கொடுத்து வாங்க முடிவு
தற்போது பங்குகளைத் திரும்பப் வாங்கும் போது 19.08 சதவீதம் பிரீமியம் விலை கொடுத்து வாங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது கடந்த மூன்று மாத சந்தை விலையின் சரராசியைப் பொருத்தும் அளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத அறிவிப்பு
ஏப்ரல் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 13,000 கோடி ரூபாய் அல்லது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை 2018-ம் ஆண்டு டிவிடெண்ட் மற்றும் பைபேக் திட்டம் மூலம் வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தது.
தேவைக்கு அதிகமான பணம்
இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது 6.1 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதலாகப் பணம் தேவைக்கும் அதிகமாக வைத்துள்ளது தெரிவதாக வல்லுநர்கள் கூறிகின்றனர்.
பிற முக்கிய நிறுவனங்கள்
இன்ஃபோசிஸ் போன்று டிசிஎஸ் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்கியுள்ளது, விப்ரோ நிறுவனம் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பைபே திட்டம் மூலம் திரும்ப வாங்கியுள்ளது, எச்சிஎல் நிறுவனமும் 3.50 கோடி பங்குகளைத் திரும்ப வங்க முடிவு செய்து அறிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications