இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகப் பணியில் இருந்து விஷால் ஷிக்கா அவர்கள் வெள்ளிக்கிழமை காலை ராஜினாமா செய்துள்ளார். இதனை உறுதி செய்த இன்ஃபோசிஸ் நிர்வாகம் இடைக்காலத் தலைமை நிர்வாகி யார் என்று அறிவித்தது.
நிறுவனத்தின் அந்த அறிவிப்பின் படி பிரவின் ராவ் அவர்கள் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று இன்ஃபோசிஸ் தரப்பு கூறியுள்ளதால் யார் இந்தப் பிரவின் ராவ் என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
பூஜ்ஜியம் முதல் மூத்த அதிகாரி வரை
1986-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிரவின் ராவ் இன்று நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் ஆவார். உள்கட்டமைப்புச் சேவைகள், ஐரோப்பாவிற்கான விநியோகத் தலைவர், சில்லறை வணிகம், நுகர்வோருக்கான பேக் செய்யப்பட்ட பொருட்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் லைப் சையின்ஸ் ஆகிய துறைகளின் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பிரவின் ராவ் செயல்பட்டுள்ளார்.
பிபிஓ
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் தலைவர்களுள் ஒருவர் பிரவின் ராவ். 2014-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார்.
படிப்பு
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், நாஸ்காம் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார்.
சவால்
விஷால் ஷிக்காவிற்குப் பதிலாகப் பிரவின் ராவ் அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ஏற்று இருப்பதால் பல சவால்கள் இவருக்கு இருக்கின்றது.
இந்திய ஐடி துறையின் குறைவான வளர்ச்சி மற்றும் பல நாடுகளில் எழுந்துள்ள விசா சிக்கல்களினால் இன்ஃபோசிஸ் பெறும் சவால்களைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்கச் சட்ட துறை
மறு பக்கம் இன்று அமெரிக்கச் சட்ட துறை அமெரிக்கப் பாதுகாப்புத் தரவுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனம் மோசடி செய்துள்ளதா, திருடியுள்ளதா என்று விசாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
சிஒஓ பிரவின் ராவ்-ன் முந்தைய பணிகள்
உலகளாவிய விற்பனை, உலகளாவிய விநியோக மற்றும் வணிகச் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் முக்கியச் செயல்பாடுகளைச் சிஒஓ, பிரவின் ராவ் மேற்பார்வையிட்டு வந்துள்ளார். வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, விற்பனை செயல்திறன், விநியோகத் திறமை, தரம், திறமை மேலாண்மை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி ஆகியவற்றில் "முக்கியச் செயல்முறைகள், அமைப்புகள் மற்றும் கொள்கைகள் தொடர்ச்சியான புதுப்பித்தலை போன்றவற்றைத் தொடர்ந்து மேற்பார்வை செய்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications