பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இன் சிஇஓவாக இருக்கும் விஷால் சிக்கா, நிறுவனத்தில் சேர்ந்து வெறும் 3 வருடத்திலேயே ராஜினாமா அறிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிர்வாக மட்டத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்து வரும் ஊழியர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர்.
ஊழியர்களின் தவிப்பிற்கும், இன்போசிஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள சிக்காவின் ராஜினாமாவிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தைப் பார்த்தால் தான் கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.
முழுமையான காரணம்
இன்போசிஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்காவின் திடீர் ராஜினாமாவிற்கு அடிப்படை மற்றும் முழுமையாகக் காரணம் இந்நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவாரான என்.ஆர். நாராயணமூர்த்தி அவர்கள் என நேரடியாகத் தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதல்
நாராயணமூர்த்தி தலைமையிலான நிறுவனர் குழுவின் தொடர் தாக்குதல் விஷால் சிக்காவை அதிகளவில் பாதித்தது. இதன் காரணமாகவே விஷால் சிக்கா நிறுவனத்தை விட்டு வெளியேறினார் என இன்போசிஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
தவறான கணிப்புகளுடனும்
மூர்த்தித் தலைமையிலான குழு இன்போசிஸ் நிர்வாகம் குறித்தும், சிக்கா குறித்தும் தொடர்ந்து தவறான கணிப்புகளுடன் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்.
சமீபத்தில் மூர்த்தி அனுப்பிய கடிதம் நிர்வாகத்தையும், சிக்காவையும் அதிகளவில் பாதித்தது. இதனாலேயே விஷால் சிக்கா நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
திறமை மீதான சந்தேகம்..
நாராயணமூரத்தி அனுப்பிய கடிதம் நிர்வாகத்தின் திறன் மற்றும் கார்பரேட் கட்டுப்பாடுகளைத் தவறவிடுதல் ஆகியவற்றின் மீது கேள்வி எழுப்பும் விதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
விஷால் சிக்கா இதற்கு முன், ஜெர்மன் ஐடி நிறுவனமான எஸ்ஏபி நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்தார்.
நிறுவனத்தின் வளர்ச்சி
நாராயணமூர்த்தி மற்றும் நிறுவனர் குழுவின் குற்றச்சாட்டுகள், நிறுவனத்தின் பரிமாற்ற வளர்ச்சி பாதையை அதிகளவில் பாதித்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் சேர்ந்த முதல் நாள் முதல் விஷால் சிக்கா சர்வதேச சந்தைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தில் பயணிக்க முடிவு செய்தார்.
இதற்கு ஆரம்பத்தில் இன்போசிஸ் நிர்வாகம் முழுமையான ஒப்புதல் அளித்தது. ஆனால் நாராயணமூர்த்தி மற்றும் நிறுவனர் குழுவின் குற்றச்சாட்டுகள் இன்போசிஸ் நிறுவனத்தின் பரிமாற்ற வளர்ச்சி பாதையை முழுமையார் சீர்குலைத்தது. இதனை விரும்பாத சிக்கா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
சேவைத்துறை
இன்போசிஸ் நிறுவனமும் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் சேவையைத்துறையை மட்டுமே சார்ந்துள்ளது. இதனை உடைக்கத் திட்டமிட்ட விஷால் சிக்கா ஆரம்பம் முதலே புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்றவும், புதிய தொழில்நுட்பத்தில் பிராடெக்களை உருவாக்கவும் முடிவு செய்தார்.
இதற்கான பணிகளையே கடந்த 3 வருடங்களாகப் பல தடைகளைத் தாண்டி செய்துவந்தார். தற்போது இதுவே இவருக்குப் பிரச்சனையாக வெடித்துள்ளது. இதற்காகவே இவர் மீது தனிப்பட்ட தாக்குதலும் நிறுவனர் குழு செய்தது.
காரணம்
நாராயணமூர்த்தியின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பது முழுமையாகத் தெரிவில்லை என்றாலும், இந்தப் பிரச்சனைக்கு ஆரம்பமாக இருந்து ராஜீவ் பன்சால்-க்கு இன்போசிஸ் நிர்வாகம் அளிக்கப்பட்ட அதிகப்படியான severance pay தான்.
அடுத்தத் தலைவர்
இன்போசிஸ் சீஇஓ பதவியில் இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் இருந்த வரை எவ்விதமான பிரச்சனையுமில்லை. இந்நிலையில் இப்பதிவில் அடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகத்திலும், பணியிலும் இல்லாத விஷால் சிக்கா இந்நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டதன் மூலமாகவே இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டது.
சரியான தேர்வு
இந்நிலையில் நிறுவனர் குழு கடந்த முறை போலவே வெளிஆட்களை இப்பதிவியில் நியமிக்காது என உறுதியாகத் தெரிகிறது.
ஆகவே இப்பதவிக்குத் தயாராக இருக்கும் அடுத்த இன்போசிஸ் உயர் அதிகாரிகள் யார் என்ற கேள்வியை விட.. இப்பதவியில் நிறுவனர் குழுவின் வாரிசுகள் வர தற்போது அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வாரிசுகள்
வாரிசுகள் பட்டியலில் இப்பதவிக்கு அதிக வாய்ப்புகள் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி வர வாய்ப்புகள் உள்ளது. காரணம் இவர் ஏற்கனவே இன்போசிஸ் நிர்வாகப் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்பாட்
விஷால் சிக்காவின் இந்த முடிவு இந்திய ஐடி நிறுவனங்களின் மத்தியில் ஆதிர்ச்சியை ஏற்படுத்திதுள்ளது. இது பல நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். ஏற்கனவே இந்திய ஐடித் துறையில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் சிக்காவின் ராஜினாமா இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு.


Click it and Unblock the Notifications