ரூயா தலைமையிலான எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் இந்திய சொத்துக்களை ரஷ்ய அரசு நிர்வகித்து வரும் ராஸ்னெப்ட் நிறுவனத்திற்குச் சுமார் 12.9 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை தற்போது முழுமையாக முடிந்துள்ளது.
கோவா-இல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த விற்பனை அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மாதங்களுக்குப் பின்பு இந்த டீல் முடிவிற்கு வந்தது.
தடை
எஸ்ஸார் நிறுவனம் தனது 45,000 ரூபாய் கடனை தீர்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட காரணத்தால் இந்தக் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது எஸ்ஸார் ஆயில் அனைத்து விதமான தாண்டு விற்பனையை முழுமைாக முடித்துள்ளது.
அன்னிய முதலீட்டுத் திட்டம்
எஸ்ஸார் ஆயில் - ராஸ்னெப்ட் நிறுவனத்திற்கு மத்தியில் நடந்த இந்த ஒப்பந்தமே அன்னிய முதலீட்டின் மூலம் செய்யப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். மேலும் ரஷ்யாவின் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமும் இதுதான்.
கூட்டணி நிறுவனங்கள்
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை ராஸ்னெப்ட் நிறுவனம் வாங்கினாலும், இதனுடன் ஆயில் பிட்கோ நிறுவனம் மற்றும் டிராபிகிரா-யூசிபி ஆகிய நிறுவனங்கள் இணைந்தே வாங்கியுள்ளது.
சொத்துக்கள்
இந்த ஒப்பந்தம் மூலம் எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் குஜராத் பகுதி விதிநார் பகுதியில் இருந்த 20 மில்லியன் டன் சுத்திகரிப்பு ஆலை, பவர் பிளான்ட் மற்றும் கேப்டீவ் போர்ட் மற்றும் 3,500 பெட்ரோல் பம்ப் ஆகியவற்றை முழுமையாகக் கைப்பற்றுகிறது ராஸ்னெப்ட் நிறுவனம்.
பிரசாந்த் ரூயா
மேலும் எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் ரூயா கூறுகையில், இந்த விற்பனையில் மூலம் நிறுவனத்திற்குக் கடன் அளித்த எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஐடிபிஐ, ஸ்டான்டர்ட் சார்டர்ட் ஆகிய வங்கிகளுக்குச் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தீர்க்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications