ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் குறைந்தகாலச் சலுகை விற்பனையாக 999 ரூபாய் முதல் ஒரு வழி விமானங்களில் பயணம் செய்யும் போது பெறலாம் என்று அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலை டிக்கெட்களைப் பெற வாடிக்கையாளர்கள் முன்கூடியே புக் செய்ய வேண்டும்.
ஏர்ஏசியா அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் '7 டேஸ் ஆப் மேட் டீல்ஸ்' என்று குறிப்பிட்டுள்ளது.
பயணச் சலுகை காலம்
ஏர்ஏசியா நிறுவனத்தின் இந்தத் திட்டம் கீழ் டிக்கெட்களைப் புக் செய்தால் 2018 பிப்ரவரி 26 முதல் 2018 ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
புக் செய்யக் கடைசி நாள்
மேலும் சலுகை விலையில் டிக்கெட் புக் செய் கடைசித் தேதி 2017 ஆகஸ்ட் 27-ம் தேதி ஆகும். இந்த டிக்கெட்களை இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் பெற முடியும்.
999 ரூபாய் டிக்கெட்
ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ள 999 ருபாய் விமான டிக்கெட் கட்டணத்தில் கொல்கத்தாவில் இருந்து பாக்தோகிறா வரை பயணம் செய்யலாம்.
டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரி உட்பட அனைத்தும் அடங்கும் என்றும் அனைத்துக் கட்டணமும் ஒரு வழிப் பாதையில் செல்லும் விமானங்களில் மட்டுமே பற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1099 ரூபாய் டிக்கெட்
ஏர் ஏசியா நிறுவனத்தின் 1,099 ரூபாய் டிக்கெட் கட்டணம் மூலமாகக் கோவா-பெங்களூர், குவாஹாட்டி-இம்பால், ஹைதராபாத்-பெங்களூர் மற்றும் கொச்சி-பெங்களூரு வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
1,499 ரூபாய் டிக்கெட்
புனே-பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினம்-பெங்களூரு வழித்தடங்களில் 1,499 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
ஏர் ஏசியா நிறுவனம் மலேஷியன் ஏரி எசியாவின் ஒரு அங்கம் என்பதால் வெளிநாட்டு விமானப் பயணங்களை 3,399 ரூபாய் டிக்கெட் கட்டணம் முதல் பயணம் செய்யலாம் என்று குறியுள்ளது.
3,399 ரூபாய் டிக்கெட்
கோலா லம்பூர் - திருச்சி மற்றும் கோலா லம்பூர் - கொச்சி செல்ல 3,399 ரூபாய் டிக்கெட் கட்டணமாகும். வைசாக் - கோலாலம்பூருக்கு 3,599 ரூபாய் டிக்கெட் கட்டணம் ஆகும். கொல்கத்தாவில் இருந்து பாங்காக் - டான் மூங் செல்ல 3,599 என டிக்கெட் கட்டணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications