சென்னை: பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி சங்கங்கள் ஐக்கிய அமைப்பின் கீழ் இருக்கும் 9 வங்கி யூனிகளில் இருக்கும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை இன்று நடத்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் இன்று வங்கி சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 லட்சம் ஊழியர்கள்
இன்றைய போராட்டத்தில் சுமார் 9 வங்கி யூனியன்களில் இருக்கும் சுமார் 10 லட்சம் வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
முக்கிய கோரிக்கை
வங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
வராக்கடன்
இந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மோசமான நிலை
பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதுவும் வங்கி அமைப்புகளின் முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட வங்கிகள்
அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்ரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஒரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று இயங்கவில்லை.
இயங்கி வரும் வங்கிகள்
வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் மூலம் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே அதிகளவில் பாதிப்படைந்துள்ள நிலையில் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி கோட்டாக் மஹிந்திரா ஆகியவை இயல்பாக இயங்கி வருகிறது.
மேலும் நாட்டில் இருக்கும் பிற தனியார் வங்கிகளும் இயல்பான முறையில் இயங்கி வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications