மத்திய அரசு பிம் ஆ பயன்படுத்தும் வணிகர்களுக்குக் கேஷ் பாக் ஆஃபரை வழங்கி வருகின்றது. மொபைல் போன் செயலியான பிம் மூலமாக வணிகர்கள் பணம் பெறும் போது இந்தக் கேஷ் பேக் 1000 ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.
தற்போது பிம் செயலி இந்தக் கேஷ் பேக் திட்டத்தின் மூலம் வணிகர்களுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகை 2018 மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்று மத்திய எலக்டிரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அறிவித்துள்ளது.
துவக்கம்
ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் இந்த ஊக்கத்தொகை பிம் ஆ பயன்படுத்தும் வணிகர்களுக்கு 6 மாதம் வரை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1000 ரூபாய் கேஷ் பேக் எப்படி?
இந்தத் திட்டத்தின் கீழ் வணிகர்கள் 20 முதல் 50 பரிவர்த்தனை வரை செய்யும் போது 50 ரூபாயும், அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 950 ரூபாய் வரை 2 ரூபாய் எனக் கேஷ் பேக் வழங்கப்படும். ஒரு மாதத்திற்குக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை பிம் செயலி மூலம் வணிகர்கள் கேஷ் பேக் பெறலாம்.
வரம்பு
மேலும் வணிகர்கள் குறைந்தது 20 புதிய நபர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பிம் செயலியினைப் பயன்படுத்திப் பணத்தினைப் பெற்று இருக்க வேண்டும். அதிலும் குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாயினை ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பெற்று இருக்க வேண்டும்.
பிம் செயலி
பிம் செயலி பயன்படுத்தும் பயனர்களுக்கு யூபிஐ ஐடி, வங்கி கணக்கு ஐஎப்எஸ்சி மற்றும் கணக்கு எண், QR குறியீடு போன்றவற்றை வைத்துப் பணத்தினை அனுப்ப முடியும், பெற முடியும்.
வாலெட் இல்லை
மொபைல் வாலெட் போன்று இல்லாமல் பயனர்கள் பிம் செயலியில் பணத்தினை வைத்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நேரடியாக வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications