ஆப்பிள் நிறுவனத்துடன் எச்சிஎல் கூட்டணி.. பங்குமதிப்பு அதிரடி உயர்வு..!
ஐடி மேலான்மை சேவை நிறுவனமான எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்காக விநியோகம் செய்வதற்காக கூட்டணி வைத்ததுள்ளது.
இரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் உறுதியானதை அடுத்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 17 சதவீதம் வரை உயர்ந்து.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் 43 ரூபாயில் இருந்து 49.10 ரூபாய் வரை உயர்ந்து அசத்தியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் 4.30 சதவீதம் வரை உயர்ந்தது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் அடித்த அறிமுகத்தில் எச்சிஎல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications