கமாடிட்டி வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவின் 28 வயதான முதல் பெண்..!

இன்றைய போட்டி நிறைந்த உலகில் நாம் புதிதாக ஒரு வணிகம் துவங்குகின்றோம் என்றால் நமக்குப் போட்டியாக ஒரு வணிகம் துவங்குவார் அல்லது அந்த இடத்தின் பக்கத்தில் ஒரு மதுபான கடைகளைத் துவங்கிச் சிக்கல்கள் கொடுப்பார்கள். இதுப்போன்று பல வணிகங்கள் பதிப்புள்ளாகி வருகின்றன.

இப்படிப்பட்ட ஒரு போட்டி, சூழ்ச்சிகள் நிறைந்த வணிக உலகின் ஒரு பெண் கமாடிட்டி வணிகம் செய்து கோடிகளைச் சம்பாதிக்கின்றார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

மேலே கூறியது போன்று பல தொல்லைகளுக்கு உள்ளன குவாளியரை சேர்ந்த தீப்பாளி தனது வணிகத்தினை முழுவதுமாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூருக்கு மாற்றிக் கமாடிட்டி வர்த்தகத்தில் இந்தியாவின் முதல் பெண்ணாகச் சாதனைப் படைத்துள்ளார்.

இவரைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

கோதுமை வர்த்தகம் துவக்கம்

கோதுமை வர்த்தகம் துவக்கம்

ஆண்கள் நிறைந்த உலகில் கமாடிட்டி சந்தையில் 28 வயதான தீப்பாளி இந்தூரில் இருந்து செய்யத் துவங்க முடிவு எடுக்கின்றார். இதற்காக நிறுவனத்தினைப் பதிவு செய்து கோதுமை வர்த்தகத்தினைத் துவங்குகின்றார்.

எதனால் கமாடிட்டி வர்த்தகம் இவரது தேர்வு?

எதனால் கமாடிட்டி வர்த்தகம் இவரது தேர்வு?

தீப்பாளிக்கு பள்ளிப் பருவத்தில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால் இவரது கனவு நொறுங்கிப் போக இந்தியாவின் நன்கு அறியப்பட்ட கமாடிட்டி சந்தை நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்து நிர்வாகம் செய்து வருகின்றார்.

தீப்பாளி அவர்களுக்கு 12 வயது ஆன போது இவரது தந்தைக்கு வணிகத்தில் பெறும் நட்டம் ஏற்பட்டது. இதனால் இவரது குடும்பம் செலவுகளைக் கூடச் சமாளிக்க முடியாமல் போனது.

 

தோல்வியை ஏற்க மருப்புவர் தீப்பாளி

தோல்வியை ஏற்க மருப்புவர் தீப்பாளி

சிந்தியா பள்ளியின் மாணவரான தீப்பாளி முதன் முதலாகத் தனது படிப்பு செலவுகளை ஏற்கப் பள்ளி மாணவர்களுக்கான டிபன் பாக்ஸ் சேவையும், விடுதி சேவை மற்றும் உணவகம் போன்றவற்றில் வேலை செய்தார்.

அவர் தனது படிப்பை முடித்து, குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற பல்வேறு நிறுவனங்களில் வேலைகளைச் செய்ய முயற்சித்தார்.

 

விளையாட்டு

விளையாட்டு

தீப்பாளி படிப்பு மட்டும் இல்லை விளையாட்டிலும் படும் சுட்டி தான். தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சேம்ப்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் சாதனைப் படைத்துள்ளார்.

கோதுமை வர்த்தகம்

கோதுமை வர்த்தகம்

ஜெய் லக்‌ஷ்மி புட்ஸ் என்ற பெயரில் இந்தூரில் தீப்பாளி கமாடிட்டி வர்த்தகம் செய்வதற்காக நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்தார்.

வணிகம் செய்தற்கான தந்திரங்களைப் பகல், இரவு சென்று பாராமல் கற்றுக்கொண்டு கமாடிட்டி வணிகத்தில் வர்த்தகத்தினைத் துவங்கினார்.

இந்தூர் சந்தையில் மொத்தம் 1,500 பதிவு செய்யப்பட்ட வணிகர்கள் இருந்தனர். அனைவரும் தீப்பாளியை வணிகம் செய்ய வரவேற்றனர். தற்போது இவரது அலுவலகம் இந்தூரின் கமாடிட்டி சந்தை கட்டிடத்தில் உள்ளது.

 

துவக்கக் காலத்தில் வணிகம்

துவக்கக் காலத்தில் வணிகம்

முதலில் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே இந்த வணிகத்தினைத் துவங்கியுள்ளார். மாதிரி கோதுமைகளைக் கொரியர் மூலம் அனுப்புவதும் ஆர்டர் கிடைத்த உடன் நேரடியாகச் சென்று டெலிவரி செய்வதுமாக முதலில் வர்த்தகம் செய்து வந்துள்ளார்.

60 கோடி வணிகம்

60 கோடி வணிகம்

கடந்த 3 ஆண்டுகளாக வணிகம் செய்து வரும் தீப்பாளி, நிறுவத்தினைப் பதிவு செய்து நடுத்தி 60 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

நிறுவனத்தில் வேலை

நிறுவனத்தில் வேலை

5 வருடத்திற்கு முன்பு இந்தூருக்கு வந்த தீப்பாளி கே பி புட்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கின்றார். அங்குத் தனது முழு உழைப்பினையும் கொடுத்து வேலை செய்து வந்தார். சில நேரங்களில் இரவு 10 மணி வரையிலும் வேலை செய்வார். அதில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டார் என்றும் கூறலாம்.

முதன் முதலாக நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்து வர்த்தகத்தினைத் துவங்கிய தீப்பாளுக்குச் சந்தை பெறும் வரவேற்பினை அளித்தது. அதற்கு முன்பு சில காலம் இவர் பதிவு செய்யாமலே வணிகம் செய்து வந்துள்ளார்.

 

கூடுதல் பொருட்கள்

கூடுதல் பொருட்கள்

முதலில் கோதுமைக்கான வணிகத்தினைத் துவங்கிய தீப்பாளி தற்போது அரிசி, சோழம், சோயா, மைதா, கோதுமை மாவு, பட்டாணி, கடலைப் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகின்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+