நாம் வாகனத்திற்குப் பெட்ரோல், டீசல் நிரப்பும் போது 6 பைசா மற்றும் 4 பைசா எனக் கழிவறைக்கும் சேர்த்துக் கட்டணமாகச் செலுத்துகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு லிட்டர் டீசலுக்கு 6 பைசாவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 4 பைசாவும் கழிவறை கட்டணமாக நாம் செலுத்தி வருகின்றோம்.
உறுதி செய்த அமைச்சகம்
பெட்ரோலியம் அமைச்சகம் மற்றும் பெட்ரோல் நிலையம் முதலாளிகள் இதற்குக் கட்டணமாகப் பெறப்படுவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் இது அவர்களுக்கு மாதம் ஒரு முறை கிளைம் செய்து பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் அந்த வருவாய் போதவில்லை என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள்
பெட்ரோல் நிலையங்கள் கழிவறை மற்றும் குடி நீர் வசதிகளை வழங்க வேண்டும். ஆனால் கழிவறை அமைக்காமல் பல பெட்ரோல் நிலையங்கள் இயங்கி வருவதாக அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
புகார் அளிக்கலாம்
பெட்ரோல் நிலையம் உரிமையாளர்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் போதவில்லை என்று கூறுகின்றனர். இது வழக்கமாக மாறிவிட்டது. எனவே பொது மக்கள் பெட்ரோல் நிலையங்களில் முறையான கழிவறை வசதியை வழங்கவில்லை என்றால் ஸ்வச்தா பாரத் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், தூய்மையாக இல்லை என்றாலும் புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பராமரிப்புக் கட்டணம் எப்படி வழங்கப்படுகின்றது?
1.7 லட்சம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் போது 9,000 ரூபாய் வரை கழிவறை பொன்ற பராமரிப்புக்காக வழங்கப்படுவதாக அனைத்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால் கூறினார்.
பராமரிப்புக் கட்டணத்தில் என்னவெல்லாம் அடங்கும்
கழிவறை பராமரிப்புக்காக மூன்று பேர் இருக்க வேண்டும், கழிப்பறை பராமரிப்புக்கு தேவையான நீர் வழங்கல் மற்றும் இதர பொருட்களைக் கணக்கில் செலவழிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications