இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கு ஏதுவாக ரிசர்வ் வங்கி முதல் முறையாக 200 ரூபாய் நோட்டை அச்சிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளியிடப்படும் இந்த 200 ரூபாய் நோட்டுச் சந்தையில் பல கேள்விகளை எழுப்பியிருந்தாலும் மத்திய அரசு தனது திட்டத்தில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் புழக்கத்திற்கு வர உள்ளது.
கள்ள சந்தை
ரிசர்வ் வங்கி சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு இப்புதிய 200 ரூபாய் நோட்டை அச்சிட்டு வைத்துள்ளதால், இந்தியாவில் நடைபெறும் பணப் புழக்கத்தைச் சரியாகக் கண்காணிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல் கள்ள சந்தை மற்றும் கருப்புப் பணத்தை முறையாக ஒழிக்க முடியும் என நம்பப்படுகிறது.
மக்கள்
100 மற்றும் 500 ரூபாய்க்கு மத்தியில் 200 ரூபாயைத் தவிர இனி புதிய மதிப்பில் ரூபாய் நோட்டுகள் இருக்காது, மேலும் மக்கள் மத்தியில் இந்த ரூபாய் நோட்டுகளை முழுமையாகக் கொண்டு சேர்க்க அனைத்து விதமான பணிகளையும் செய்துள்ளோம் என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது.
2,000 மற்றும் 500 ரூபாய்க்கு ஏற்பட்ட பற்றாக்குறை இந்த முறை இருக்காது என்பதையே ரிசர்வ் வங்கி இங்குப் பதிவு செய்கிறது.
ரிசர்வ் வங்கி
200 ரூபாய் நோட்டு வெளியீடு குறித்து எவ்விதமான தகவல்களையும், அறிவிப்புகளையும் இதுவரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
கருப்புப் பணம்
2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் நாட்டில் கருப்புப் பணம் குறைக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு முறையும் கூறிவரும் மத்திய அரசு, 200 ரூபாய் நோட்டு மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அடியோடு அழிக்க முடியும் என நம்புகிறது.
இரண்டு நன்மைகள்
200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளது.
ஒன்று பணப்பரிமாற்றம் எளிமைப்படுத்தப்படும், மற்றொன்று 2000 ரூபாய் அறிமுகத்தின் மூலம் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு, குறைவான பயன்பாடு ஆகியவை 200 ரூபாய் நோட்டு மூலம் தீர்க்கப்படும்.
இது இணையத்தில் வெளியான புகைப்படும். புதிய 200 ரூபாய் நோட்டின் வடிவத்தை இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
50 ரூபாய் நோட்டு
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 50 ரூபாய் நோட்டின் விடிவம்
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications