விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது இந்நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார்.
இப்பணியில் விஷால் சிக்கா நிர்வாகத்தில் எவ்விதமான முக்கியப் பங்கும் வகிக்கப்போவதில்லை என இந்நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதான் வேலை
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கும் விஷால் சிக்கா நிறுவனத்தின் தொழில்நுட்ப மூலோபாயத்தை மட்டுமே கவனிக்க உள்ளார். இவரது பணி குறித்து எவ்விதமான கருத்தையும் சிக்காவோ அல்லது இன்போசிஸ் நிர்வாகமோ அளிக்க விரும்பவில்லை.
சவால்கள் இல்லாத வேலை
நாட்டின் 2வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்த சிக்கா தற்போது அவருக்கு ஏற்ற சவால்கள் இல்லாத வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார்.
1 டாலர்
இந்த வேலைக்கு விஷால் சிக்கா வாங்கும் சம்பளத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சிக்கா ராஜினாமா அளித்தபோது, இவருக்குத் துணை பதவி அளிக்கப்பட்டது.
இன்போசிஸ் நிர்வாகம் இதற்காக எவ்வளவு சம்பளம் வேண்டும் எனக் கேட்டபோது சிக்கா கூறியது வருடத்திற்கு 1 டாலர் சம்பளம்.
நாராயணமூர்த்தி
சிக்காவின் ராஜினாமாவிற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரா நாராயாணமூர்த்தித் தான், மூர்த்தியின் தொடர் காரணமற்ற குற்றங்கள், தேவையற்ற எதிர்ப்புகளில் கடுப்பாகி விஷால் சிக்கா தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
எதிர்ப்பு
தற்போது நாராயணமூர்த்திக்கு எதிராக இந்நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முக்கியமாக மோகன்தாஸ் பாய் மற்றும் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான வி.பாலகிருஷணன் ஆகியோரும் அடங்குவர்.


Click it and Unblock the Notifications