வெறும் 500 ரூபாயில் ஜியோ போன் ப்ரீ புக்கிங் துவங்கியது.. ஏர்டெல், ஐடியா என்ன செய்யப்போகிறது..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போனை முன் கூட்டியே புக் செய்ய இன்று மாலை 5:30 மணி முதல் செய்யலாம் என்றும் முன்பதிவை ஜியோ இன்ஃபோகாம் ரீடெய்ல் கடைகள், இணையதளம், செயலி என அனைத்து வசதிகளையும் பயன்படுத்திப் புக் செய்யலாம்.

மொபைல் போனை புக் செய்யும் போது 500 ரூபாய் செலுத்த வேண்டும். மீதத்தொகையான 1000 ரூபாயினைப் போன் டெலிவரி செய்யப்படும் போது அளிக்க வேண்டும்.

எப்போது டெலிவரி?

எப்போது டெலிவரி?

ஜியோ போனை அறிமுகம் செய்த போது முகேஷ் அம்பானி ஆகஸ்ட் முதல் புக்கிங் துவங்கும் என்றும் செப்டம்பர் மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

தகவல்

தகவல்

ஜியோ பயனர்களுக்கு இந்தியாவின் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் ஜியோ போன் முன் பதிவு மாலை 5 மணி முதல் துவங்கும் என்று குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முழுப் பணமும் திருப்பி அளிக்கப்படும்

முழுப் பணமும் திருப்பி அளிக்கப்படும்

ஏற்கனவே முகேஷ் அம்பானி அறிவித்த படி 3 வருடம் ஜியோ போனை பயன்படுத்திய பிறகு திருப்பி அளித்தால் செக்யூரிட்டி டெபாசிட்டாகப் பெறப்பட்ட 1,500 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும்.

குரல் அழைப்புகள் இலவசம்

குரல் அழைப்புகள் இலவசம்

ஜியோ போனில் குரல் அழைப்புகள் எப்போதும் இலவசம், இணையதளம் பயன்படுத்த வேண்டும் என்றால் மட்டும் மாதத்திற்குக் குறைந்தது 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

வாராந்திர திட்டங்கள்

வாராந்திர திட்டங்கள்

ஜியோ போனில் வாராந்திர ரீசார்ஜ் பேக்குகளும் உள்ளன, இதனைப் பயன்படுத்த 53 ரூபாய்க்கும், இரண்டு நாட்களுக்கு 23 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

 வசதிகள்

வசதிகள்

ஜியோ போனில் டயல், தட்டச்சு செய்திகளை அனுப்புதல், பொழுதுபோக்கு போன்றவற்றை ஏற்கனவே போனில் அளிக்கப்பட்டுள்ள செயலிகளின் மூலம் பயன்படுத்தி மகிழலாம்.

ஜியோ டிவி

ஜியோ டிவி

ஜியோ போன் டிவி உதவியுடன் போனை டிவி-ல் இணைத்து ஜியோ டிவி செயலி உதவியுடன் உங்களுக்கு விருப்பமான சேனல்கலையும் பார்த்து மகிழலாம்.

இலக்கு

இலக்கு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 50 லட்சம் பயனர்களுக்கு ஜியோ போனை விற்க வேண்டும் என்று இலக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ போன் புக் செய்பவர்கள் கவனத்திற்கு?

ஜியோ போன் புக் செய்பவர்கள் கவனத்திற்கு?

புக் செய்த பிறகு போனை டெலிவரி செய்யும் போது கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று நினைவில் வைத்துக்கொள்ளவும், உங்கள் குடும்பத்தில் யாருக்கு எல்லாம் போன் புக் செய்கின்றீர்கள் என்ற பட்டியலை உள்ளிட முடியும். எனவே எத்தனை போன் யாருக்கு எல்லாம் வாங்கியுள்ளீர்கள் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

பணம் செலுத்துவது எப்படி?

பணம் செலுத்துவது எப்படி?

உங்கள் வீட்டில் ஜியோ போனை டெலிவரி செல்லும் போது டெபிட்/கிரெடிட் கார்டுகள் பயன்படுத்திக் கூடுதல் தொகையான 1000 ரூபாயினைச் செலுத்த முடியும்.

ஏர்டெல் - ஐடியா

ஏர்டெல் - ஐடியா

ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தீபாவளிக்கு முன்பு 2500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகச் செய்வதாக அறிவித்துள்ளன. எனவே ஜியோ போன் இவர்கள் வர்த்தகத்தினை என்னவெல்லாம் செய்யப் போகின்றதோ?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+