இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் பதவியில் நந்தன் நீலகேணி.. அமெரிக்க நிறுவனத்தில் விஷால் சிக்கா..!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய விஷால் சிக்கா ஹெவ்லெட் பேக்கர்டு எண்டர்பிரைஸ் (ஹெச்பி) நிறுவனத்தில் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பதவியில் சேர வாய்ப்புள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

சென்ற வார வெள்ளிக்கிழமை இஃபோசிஸ் நிறுவன போர்டு குழு மீதான அத்திருத்தியால் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார். இதற்கு ஆதாரமற்ற, தீங்கிழைக்கக் கூடிய மற்றும் அதிகமான தனிப்பட்ட தாக்குதல்கள் பெருகிவருகின்றது என்பதெல்லம் காரணங்கள் என்று கூறப்பட்டது.

ராஜினாமா

ராஜினாமா

சென்ற வாரம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக நீட்டிக்க இருப்பதாகவும் விஷால் ஷிக்கா கூறினார். ஆனால் ஒரே வாரத்தில் ராஜினாமா செய்தார். பின்னர் நந்தன் நீலகேனி இந்தப் பதவிக்கு வருவார் என்று கூறப்பட்டது.

நந்தன் நீலகேனி

நந்தன் நீலகேனி

அதேப்போன்று வியாழக்கிழமை முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நீலகேனி மீண்டும் தலைவர் பதவியினை ஏற்றுள்ளார். இதனால் நிறுவனத்தில் தற்போது உள்ள அனைத்துச் சிக்கல்களும் விரைவில் தீரும் என்றும் கூறப்படுகின்றது.

முதன்மை தொழில்நுட்ப அதிகாரி

முதன்மை தொழில்நுட்ப அதிகாரி

அதே நேரம் தமிழ்குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி எச்பி நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பதவியை விஷால் ஷிக்கா அவர்கள் நிர்வகிக்க இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. எச்பி நிறுவனம் இந்தப் பதவியில் இருந்து மார்க் ஃபிங்க் அவகள் வெளியேறிய பிறகு வேறு யாரையும் நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எச்பி

எச்பி

அமெரிக்க ஐடி நிறுவனமான எச்பி வன்பொருள் மற்றும் மென்பொருள் விற்பனை செய்கிறது, எச்பி கணினிகள் மற்றும் பிரிண்டர்களை விற்பதில் முன்னிலை வகிக்கின்றது.

அதிருப்தியில் வந்த ஆஃபர்

அதிருப்தியில் வந்த ஆஃபர்

விஷால் ஷிக்கா அவர்கள் எப்போது இன்ஃபொசிஸ் நிர்வாகத்தின் மீது அதிருப்தியாக இருப்பதாகக் கூறினாரோ, அப்போதே எச்பி நிறுவனம் இவருக்கு வேலைக்கான கடிதத்தினை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

விஷால் ஷிக்கா குற்றச்சாட்டு

விஷால் ஷிக்கா குற்றச்சாட்டு

மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி விஷால் ஷிக்காவை பெரிய அளவில் புன்படுத்திவிட்டதாகவும், தனிநபர் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்பட்டது.

நீலகேனியின் வருகை

நீலகேனியின் வருகை

நாராயண மூர்த்தி இணை நிறுவனரான நந்தன் நீலகேனி மீண்டும் வருவதை ஏற்றுக்கொண்டதனை அடுத்து வியாழக்கிழமை முதல் அந்தப் பதவிக்குத் திரும்பி உள்ளார். நந்தன் நீலகேனியின் வருகை தான் விஷால் ஷிக்காவின் வெளியேற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

விஷால் ஷிக்கா

விஷால் ஷிக்கா

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் விஷால் ஷிக்கா அவர்கள் சேறும் முன்பு ஜெர்மன் மென்பொருள் நிறுவனமான சேப் நிறுவனத்தில் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றுள்ளார். இவரது தொழில்நுட்ப அறிவின் மூலம் ஆட்டோமேஷன் துறையில் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+