ஐடியா நிறுவனத்தின் மீது ரூ.3 கோடி அபராதம்..!
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களை அழைக்கும்போது கூடுதல் கட்டணத்தை வசூலித்ததாக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மீது 2.97 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த தொகையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக செலுத்த முடியாத காரணத்திற்காக ஐடியா நிறுவனம் டிராய்-இன் டெலிகாம் கன்ஸ்யூமர் எடுகேஷன் அண்ட் பிரோடெக்ஷன் பண்ட் நிதியில் வைப்பு செய்ய வேண்டும் என டிராய் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் அனைத்தும் மகாரஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய வட்டங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மீது விதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications