பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விஷால் சிக்கா விலகிய நிலையில், இப்பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்கப் பல்வேறு ஆய்வுகளையும், தேர்வுகளையும் செய்ய வேண்டியுள்ளதால், இப்பணியைத் திறம்படச் செய்து முடிக்க ஈகான் ஜின்டெர் நிறுவனத்தை இன்போசிஸ் நியமித்துள்ளது.
புதிய தலைவர்
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலகேனி இந்நிறுவனத்தின் non-executive chairmanஆக நியமிக்கப்பட்ட 4 மணிநேரத்தில் ஈகான் ஜின்டெர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நந்தன் நீலகேனி தலைமையில் புதிய சிஇஓ நியமிக்கும் பணி விரைவாக நடக்க உள்ளதாகத் தெரிகிறது. மேலும் நீலகேனியின் நியமனம் இந்நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை
ஈகான் ஜின்டெர் நியமனத்திற்கு இன்போசிஸ் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உடனடியாகப் பணிகளைத் துவங்கப்பட்டுள்ளது. புதிய சிஇஓவிற்கான தேர்வுகள், அவருக்கான சம்பளம், எப்படிக் கண்டறிய வேண்டும், எந்தெந்த தகுதிகள் அவசியம் என அனைத்து விதமான தகவல்களையும் சேகரிக்கவும் ஆய்வு செய்யும் தனிக் குழுவை அமைத்துள்ளது ஈகான் ஜின்டெர்.
கிரன் முசம்தார் ஷா
தற்போதைய நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் இன்டிப்பென்டன்ட் டைரக்டர் மற்றும் பயோக்கான் நிறுவனத்தின் தலைவருமான கிரன் முசம்தார் ஷா புதிய சிஇஓ தேர்வு மற்றும் சம்பள குழுவின் தலைவராக உள்ளார்.
இந்தக் குழு தான் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தத் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்ய உள்ளது.
யாருக்கு வாய்ப்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவிற்கான தேடுதல் வேட்டையில் மிகப்பெரியதாக இருக்கப்போகிறது. தற்போது நிறுவனத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள், வெளி நிறுவனத்தில் பணியாற்றும் முக்கியத் தலைவர்கள், இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பழைய ஊழியர்கள் என அனைவரையும் ஆய்வு செய்ய உள்ளோம்.
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என நந்தன் நீலகேனி தெரிவித்தார்.
சவால்
புதிதாக நியமிக்கப்படும் சிஇஓ நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நிர்வாகம் மற்றும் நிறுவனர்கள் குழு மத்தியில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
மார்ச் 2018
இந்தத் தேடுதல் வேட்டை மார்ச் 2018 வரையிலான காலம் வரை நடைபெறும்.
ஆகவே புதிய சிஇஓ-வை தேர்ந்தெடுக்கும் வரை அல்லது மார்ச் 2018 வரையில் பிரவின் ராவ் தற்காலிக சிஇஓவாக இருப்பார்.
வேட்டை ஆரம்பம்..
இதன் மூலம் அடுத்தச் சில நாட்களில் ஈகான் ஜின்டெர் நிறுவனம் இன்போசிஸ் சிஇஓ பதவிக்குச் சரியான ஆட்களைப் பட்டியலிட்டுத் தரப்போகிறது.
இதன் பின் ஸ்கிரீனிங் தேர்வுகள் நடைபெறும் என இன்போசிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications