இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதேவேளையில் இச்சேவையை அளிக்கும் நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்ந்து மக்களை வாட்டிவதைக்கிறது.
ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண உயர்வுகளை தடுக்க டெல்லி அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளதாக டெல்லி போக்குவரத்து துறை அமைப்பு கைலாஷ் காலாட் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன்
டாக்ஸி நிறுவனங்கள் ஒரு கிலோமீட்டர்-க்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும் அதிகமான தொகையை மக்களிடம் இருந்து பெற்று வருகிறது. இதனை தடுக்கும் வரையில் நகரப்புறங்களில் மட்டும் சேவை அளிக்கும் இந்த நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்கப்பட உள்ளது என கைலாஷ் தெரிவித்தார்.
அதிகப்படியான கட்டணம்
இப்புதிய கட்டுப்பாட்டில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலீக்க அதிகப்படியான தொகையை அரசு நிர்ணயம் செய்யும். இதன் விபரங்கள் அரசின் நகர டாக்ஸி திட்டம் 2017இல் வெளியிடப்படும்.
இதன் மூலம் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள் கட்டுக்குள் வைக்கப்படும்.
10 ரூபாய்
தற்போதைய அளவிலான ஆலோசனையில் ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் என்ற கட்டணத்தை அதிகப்படியான கட்டணமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஒரு வருட விவாதம்..
ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண நிர்ணயம் குறித்து கடந்த ஒரு வருடமாக டெல்லி அரசு விவாதித்து தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு மக்களை பாதிக்கும் இதை பற்றி பேச போகிறதா என்ன..? பேசினால் நன்றாக இருக்கும்.
எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கும் தமிழக மக்கள்.


Click it and Unblock the Notifications