ஜூலை மாதம் முதல் பெட்ரோல் விலை 6 ரூபாய் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தினமும் விலை சிறிது சிறிதாக உயர்ந்து மூன்று வருடத்தில் அதிகப்படியான உயர்வை பெட்ரோல் பெற்றுள்ளது.
டீசல் விலை 3.67 ரூபாய் உயர்ந்து 57.03 ரூபாயாக டெல்லியில் பெற்றுள்ளது. இது கடந்த 4 மாதத்தில் அதிகப்படியான உயர்வாகும்.
சென்னை இன்றை பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71.60 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் 60.3 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஜூன் மாத விலை நிலவரம்
இதுவே பெட்ரோல் விலை ஜூன் மாதம் 23-ம் தேதி அன்று சென்னையில் பெட்ரோல் விலை 65.04 ரூபாய் லிட்டர் என விற்கப்பட்டது. டீசல் விலை 56.73 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினசரி மாற்றம்
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 வருடமாகக் கடைப்பிடித்து வந்த ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் விலை மாற்றி வந்த பெட்ரோல் விலையினை ஜூன் மாதம் முதல் தினமும் விலை மாற்றப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சராசரியான தினமும் விலை ஏறும் பெட்ரோல்
இதனைப் பார்க்கும் போது பெட்ரோல் மீதான விலையைப் பொதுத்துறை நிறுவனங்கள் தினமும் சராசரியாக 1 பைசா முதல் 15 பைசா வரையில் உயத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உலகச் சந்தையினைப் பொருத்து பெட்ரோல், டீசல் மீதான விலையினை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்த நிலையில் உலகச் சந்தையில் பெரிதாக மாற்றம் இல்லாத போதிலும் விலையினை இந்த அளவிற்கு உயர்த்தி இருப்பது பொதுமக்கள் இடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.87 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.41 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.
குறிப்பு
தினமும் பெட்ரோல் விலையினை மாற்றி அமைப்பதினால் மக்களுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் தெரியாது, அரசுக்கும் நன்மை அளிக்கும் என்று கூறிய நிலையில் இரண்டு மாதத்தில் மத்திய அரசு 6 ரூபாய் விலையினைக் கண்ணுக்குத் தெரியாமல் உயத்தியுள்ளது.
அப்படியானால் இந்தத் தினசரி விலை மாற்ற முறையினால் மக்கள், அரசு நிறுவனங்கள், அம்பானி இவர்களில் யார்க்கு லாபம் என அரசு விளக்க வேண்டும்?
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications