2016 நவம்பர் 8ஆம் தேதி 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை முழுமையாக புழக்கைத்தில் நீக்கப்பட்டு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விரைவில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன், தோற்றத்துடன் மீண்டும் 1,000 ரூபாய் நோட்டு வெளிவரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
புதிதாக 1,000 ரூபாய் நோட்டு உருவாக்கும் பணியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி ஒருவர் மூலம் இந்தத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எப்போது முதல்?
புதிய 1,000 ரூபாய் நோட்டுக்கான வடிவமைப்பு, காகிதம், அச்சிடுதல் போன்ற பணிகள் முழுவீச்சாக நடைபெற்று வருவதாகவும் எனவே 2017 டிசம்பர் மாதத்திற்குள் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
எங்கு அச்சிடப்படுகின்றது?
இந்தப் புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை மைசூர் மற்றும் சல்போனி அச்சகங்களில் அச்சிடப்பட்டு வருவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
எதனால் 1,000 ரூபாய் நோட்டு மீண்டும் அமலுக்கு வருகின்றது?
500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் இடையில் உள்ள நீண்ட இடைவேளியினைக் குறைப்பதற்காகவே இந்தப் புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதனால் சில்லறை பிரச்சனை தீரும், அதே நேரம் 2,000 ரூபாய் நோட்டு முழுமையாகத் திரும்பப்பெறும் என்றும் கூறப்படுகின்றது.
200 ரூபாய் நோட்டு
ஆகஸ்ட் 25, வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி பிரகாசமான மஞ்சள் நிற 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது. அதேபோன்று புதிய 50 ரூபாய் நோட்டினையும் சென்ற வாரம் அறிமுகம் செய்துள்ளது.
அலைமோதும் மக்கள்
ஆர்பிஐ வங்கியின் முன்பு சனிக்கிழமை முதல் புதிய 200 ரூபாய் நோட்டைப் பெற கூட்டம் அலைமோதிவருகின்றது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எதற்காக 200 ரூபாய் நோட்டு அறிமுகம்?
2000 ரூபாய் நோட்டை வெளியிட்ட பிறகு இருக்கும் சில்லறை தட்டுப்பாட்டினை குறைப்பதற்காகவே இந்தப் புதிய 200 ரூபாய் நோட்டினை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
எங்குக் கிடைக்கும்?
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் தற்போது குறிப்பிட்ட ஆர்பிஐ அலுவலகங்களில் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் இதன் புழக்கம் வங்கிகள் மூலை அதிகப்படுத்தப்படும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.
மக்கள் நிம்மதி
புதிய 200 ரூபாய் அமலுக்கு வந்துள்ள நிலையில் டிசம்பர் மாதம் முதல் 1000 ரூபாய் நோட்டுப் புழக்கத்திற்கு வருவதினால் சில்லறைக்காக அலைந்து திரிந்த மக்களுக்கு நல்ல செய்தி தானே.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications