இந்தியாவின் 2வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த விஷால் சிக்கா பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தனது சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவில் இருக்கும் இன்போசிஸ் பவுண்டேஷன் என்னும் அறப்பணி செய்யும் அமைப்பின் தலைவராக இருக்கும் விஷால் சிக்காவின் மனைவி வந்தனா சிக்காவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதம்..
இன்போசிஸ் பவுண்டேஷன் யூஎஸ்ஏ அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக நான் முடிவு செய்துவிட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்குத் தெரியும் தனிநபரின் விருப்பம் மற்றும் கனவுகளை அடைய நிர்வாகம் எப்போது தடையிருக்காது எனக்குத் தெரியும் என வந்தனா தனது ராஜினாமா கடித்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இக்கடிதத்தை இன்போசிஸ் நிர்வாகத்திற்கு அனுப்பியது மட்டுமல்லாமல் வந்தனா தனது பிளாகிங் தளத்திலும் பதிவிட்டார்.
ஸ்டார்ட்அப் கனவு
வந்தனா சிக்கா கம்பியூட்டர் சையின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம்பெற்றுள்ளார், இவர் தனது சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அமைக்கும் பணியில் தற்போது உள்ளார்.
இன்போசிஸ் அழைப்பு
அமெரிக்காவில் நிறுவனத்தின் சார்பாகப் பல்வேறு விதமான சிஎஸ்ஆர் (corporate social responsibility) பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. கலிபோர்னியா மற்றும் அமெரிக்கா முழுவதும் நிகழ்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இன்னோவேஷன் இணையாக முக்கியக் கல்வி பணிகளைச் செய்ய வந்தனா சிக்காவிற்கு இன்போசிஸ் அழைப்பு விடுத்துள்ளது.
திடீர் மாற்றம்
அனைத்தும் சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்க, இன்போசிஸ் நிர்வாகத்தில் விஷால் சிக்காவிற்கு நாராயணமூர்த்தித் தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்த காரணத்தால், விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் பதவியில் இருந்து வந்தனா ராஜினாமா செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications