எச்1பி விசா கட்டுப்பாடுகளால் இந்தியாவிற்கு சதி செய்த அமெரிக்கா..!

இந்தியா மீதான எச்1பி விசா தடையால் நன்மை அடைந்த 10 நாடுகள்..!

அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம் பதவியேற்றிய முதல், எச்1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக இந்திய நிறுவனங்கள் மீது கடுமையாகக் குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் மூலம் அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாட்டுக்களை விதித்து இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய முட்டைகட்டையைப் போட்டது அமெரிக்கா. இந்தக் கட்டுப்பாடுகளால் சுமார் 10 நாடுகள் லாபமடைந்துள்ளது.

ஸ்வீடன்

ஸ்வீடன்

10 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் ஸ்வீடன் 63.4 சதவீத வாய்ப்புகளுடன் கடைசி இடத்தைப் படித்துள்ளது.

இந்த ஆய்வு மற்றும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற நாட்டுகள் குறித்து முழுமையான விபரங்கள் கீழே.

 

நெதர்லாந்து

நெதர்லாந்து

STEM (science, technology, engineering and mathematics) திறன் குறைபாடு, அதிக வாடகை ஆகியவற்றின் மூலம் நெதர்லாந்து இப்பட்டியலில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் மூலம் நெதர்லாந்து நாட்டிற்கு 63.5 சதவீத வாய்ப்புகள் உள்ளது.

 

செக் ரிபப்ளிக்

செக் ரிபப்ளிக்

63.5 சதவீத வாய்ப்புகளுக்குடன் செக் ரிபப்ளிக் நாடு 28 நாடுகள் உட்படுத்தப்பட்ட ஆய்வில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நாட்டில் திறன் அதிகமாக இருந்தாலும் போட்டிகள் மிகவும் குறைவு.

 

ஹங்கேரி

ஹங்கேரி

ஊழல் மற்றும் குறைவான STEM திறனில் குறைபாடு இருந்தாலும் சம்பள அளவுகள் இந்நாட்டில் மிகவும் குறைவு. அதலால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இது மிகவும் சாதகமான ஒரு இடமாக உள்ளது. இதன் மூலம் இந்நாட்டில் இருந்து விசா விண்ணப்பம் செய்வோரில் 64.6 சதவீதம் பேருக்கு விசா கிடைக்கும் என இந்த ஆய்வு கூறியுள்ளது.

ஹங்கேரி பெற்றுள்ள இடம் 7.

 

பல்கேரியா

பல்கேரியா

கார்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவான சட்டதிட்டங்கள், இண்டர்நெட் வேகம், திறமையின் போட்டிகள், வாடகை விகிதங்கள் ஆகியவை பல்கேரியா நாட்டிற்கு மிகவும் சாதகமாக உள்ளது. இதன் மூலம் இந்நாட்டு 6 வது இடத்தைப் பெற்று 65.2 சதவீத வாய்ப்புகளைப் பெற்ற உள்ளது.

நியூசிலாந்து

நியூசிலாந்து

STEM துறையில் திறனில் பற்றாக்குறை இருந்தாலும், ஆங்கிலப் புலமையில் இவர்கள் அபாரம் ஆகவே இவர்கள் 65.5 சதவீத வாய்ப்புகள் பெறுவார்கள். டாப் 10 பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது நியூசிலாந்து.

பின்லாந்து

பின்லாந்து

இந்த ஆய்வை செய்த ஹோக்கர்ரேங் நிறுவனம் பட்டியலிட்டு இருந்த 28 நாடுகளில் பின்லாந்து தான் ஊழல், லஞ்சத்தில் மிகவும் குறைவான அளவீட்டை கொண்ட நாடாகும்.

எச்1பி விசா கட்டுப்பாடுகளுக்குப் பின் பின்லாந்து 65.7 சதவீத வாய்ப்புகள் பெறும் என இந்த ஆய்வு கூறியுள்ளது.

 

தைவான்

தைவான்

10 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் 3 வது இடத்தில் இருக்கும் தைவான் 66.3 சதவீத வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. அமெரிக்க STEM திறமை அதிகளவில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தைவான் டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளது.

போலாந்து

போலாந்து

இந்நாட்டில் தற்போது டெவலப்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்நாட்டினர் உலகம் முழுவதும் தொழில்நுட்ப பணிகளுக்காகச் சென்று வருகின்றனர். இதனால் 67.4 சதவீத வாய்ப்புகளைப் பெற்றுள்ளது போலாந்து.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

அமெரிக்கா அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகளுக்குப் பின் சிங்கப்பூர் 70.3 சதவீத வாய்ப்புகளைப் பெற்றும். ஆசியாவின் டெக்னாலஜி ஹப் ஆக இருக்கும் சிங்கப்பூர் வர்த்தக வரி மற்றும் இண்டர்நெட் ஸ்பீடு மூலம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+