இந்திய பங்குச்சந்தையில் எப்போதுமில்லாத அளவிற்கு இந்த வருடம் ஐபிஓ எண்ணிக்கை அதிகமாக இருக்குமென கணிக்கப்பட்ட நிலையில், தற்போது திருமணத்திற்காக வரன் தேடும் இணைய சேவை அளிக்கும் Matrimony.com நிறுவனம் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் களமிறங்க உள்ளது.
ஐபிஓ
பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் முன்னணி பிராண்டான Matrimony.com பங்குச்சந்தையில் இறங்குவதற்காக ஜூலை மாதத்தில் செபி ஒப்புதல் அளித்தது.
500 கோடி ரூபாய்
இந்த ஐபிஓ மூலம் Matrimony.com சுமார் 3,767,254 பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் 500 கோடி ரூபாய் வரையிலான நிதிதிரட்டும் திட்டத்தில் இந்நிறுவனம் உள்ளது.
செபி மறுப்பு
2015ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் இறங்குவதற்தாக செபியிடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்தபோது செபி மறுப்பு தெரிவித்த நிலையில், ஜூலை மாதத்தில் தனது கனவு திட்டத்தை நிறைவேற்றியது.
முக்கிய பணிகள்
பங்குச்சந்தையில் தனது பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை விளம்பரம், வர்த்தக வளர்ச்சிக்காக செய்யப்படும் புதிய பிரோமோஷன் வேலைகள், புதிய அலுவலகத்திற்காக நிலம் வாங்குதல் (சென்னையில்), வங்கியில் இருக்கும் ஓவர்டிராப்ட் பணத்தை திருப்பிகொடுத்தல் என முக்கிய பணிகளுக்காக செலவிட திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 11
மும்பை பங்குச்சந்தையில் 11 முதல் 13ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஐபிஓவிற்காக திறக்கப்படும் Matrimony.com நிறுவன பங்குகள் 500 கோடி ரூபாய் வரையிலான நிதியை திரட்டும் முடிவில் உள்ளது.
முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?
சர்வதேச பங்குச்சந்சையின் பாதிப்புகள் இந்திய சந்தையில் அதிகமாக காணப்படும் நிலையில், உள்நாட்டு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம்.
அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் இணையத்தின் வாயிலாக வரன் தேடும் வழக்கத்தை துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீடாக இல்லாமல் குறைந்த காலக்கட்டத்திற்கு ஐபிஓ மூலம் முதலீடு செய்யலாம். கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications