இந்தியாவின் புதிய உள்துறை செயலாளர் ராஜீவ் கயூபா.. யார் இவர்?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக வியாழக்கிழமை முதல் பதவி ஏற்றார் ராஜீவ் கயூபா. கயூப 2017 ஜூன் 27-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அலுவலக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து ராஜிவ் மெஹ்ரிஷி அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து ராஜிவ் கயூபா இந்தப் பதவியை ஏற்றுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி

ராஜிவ் கயூபா ஜார்கான்ட் கேடரின் 1982 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். முன்னதாக இவர் மத்திய அமைச்சகத்தில் இணை மற்றும் கூடுதல் செயலாளராகவும் இருந்துள்ளார். நக்சல் பிரிவுகளைக் கண்காணித்து வந்த இவர் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

சென்ற வருடம் மதுசூதன் பிரசாத் ஓய்வு பெற்ற பிறகு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தில் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயலாளராகக் கயூபா நியமிக்கப்பட்டார்.

பரந்த அனுபவம்

மத்திய மற்றும் மாநில அரசுகளிலும் மற்றும் சர்வதேச அமைப்புகளிலும் கொள்கை வகுப்பு மற்றும் திட்ட அமர்வுகளில் மூத்த பதவிகளில் கயூபா பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

பிறந்த

1959-ம் ஆண்டுப் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த கயூபா பாட்னா பலகலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்றார். ஜார்கண்டு மாநிலத்தில் 15 மாதங்கள் வரை மூத்த செயலாளராகப் பணியாற்றினார்.

மத்திய அரசு பதவிகள்

அதன் பின்னர் மத்திய அரசின் கீழ் உள்துறை அமைச்சகத்தில் , நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்டவரையில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் பிரதிநிதி

நான்காண்டுகள் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவில் இந்தியாவின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். பீகாரில், கயா, நலாந்தா மற்றும் முசாபர்பூரில் 7 ஆண்டுகளாகக் கலெக்டர் மற்றும் மாவட்ட நீதவான் போன்ற வேலைகளில் பணியாற்றி உள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர்

மத்திய உள்துறை செயலாளராக, கயூபா சில முக்கியப் பிரிவுகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் மாவோயிசப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கையாண்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is Rajiv Gauba, India’s new Home Secretary?

Who is Rajiv Gauba, India’s new Home Secretary?
Story first published: Thursday, August 31, 2017, 16:07 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns