யோகா குருவாக இருந்து வர்த்தகராக மாறியுள்ள பாபா ராம்தேவ் பேக் செய்யப்பட்டு விற்கப்படும் குடிநீர் வணிகத்தில் அடுத்ததாகத் துவங்க உள்ளார்.
இவரது நிறுவனமான பதஞ்சலி தயாரிப்பில் திவ்ய ஜல் என்ற பெயரில் இந்த பேக் செய்யப்பட்ட குடிநீர் தயாரிப்பை இமாலய மலை அடிவாரத்தில் தீபாவளி முதல் துவங்க இருக்கின்றார்.
1,000 கோடி இலக்கு
திவ்ய ஜல் நீர் வியாபாரத்தினை 6 மாதத்திற்குள் இந்தியா முதல் விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2018-2019 நிதி ஆண்டில் இதன் மூலம் 1,000 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் பாபா ராம்தேவின் செய்தித் தொடர்பாளர், எஸ்.கே. டிஜர்வாலா தெரிவித்தார்.
ஆலை
ஹரித்வார் மற்றும் லக்னோவில் மைந்துள்ள பதஞ்சலி ஆலைகளில் இதன் பணிகள் நடைபெறும் என்றும் பாட்டில் நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் ஒரு மூன்றாம் தரப்பு ஒப்பந்தம் போன்றவை செய்யத் திட்டம் உள்ளதாகவும், வர்த்தகம் வளரும் போது தனியாக அனைத்துப் பணிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
லக்னோ ஆலை
பதஞ்சலி நிறுவனம் லக்னோவில் அமைத்துள்ள ஆலையில் மட்டும் தினமும் 1,00,000 லிட்டர் நீர் பாட்டில்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்து டிஜர்வலா கருத்து தெரிவிக்க மருத்துவிட்டார்.
இமாலய மலை
இமாலய மலை அடிவாரத்தில் இருந்து நீர் எடுக்க பஞ்சலி நிறுவனத்திற்கு மட்டும் இல்லாமல் ஏற்கனவே டாடா மற்றும் பெப்ஸி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பு
இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நீருக்கு 2016-ம் ஆண்டு 7,040 கோடி ரூபாய் சந்தை இருந்ததாகவும், அதுவே 2021-ம் ஆண்டு 15,080 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கை கூறுகின்றது.
முக்கிய பிராண்டுகள்
மும்பை சேர்ந்த பிஸ்லரி நிறுவனத்திடம் தான் 24 சதவீத இந்திய சந்தை உள்ளது. மேலும் அக்வாஃபினா, கின்லே உள்ளிட்ட நிறுவனங்களும் பிராண்டட் நிறுவனங்களாகச் சந்தையில் உள்ளன.
2017-2018 நிதி ஆண்டு
2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாயினை பெற்றதாக அறிவித்து இருந்தது. இதுவே 2017-2018 நிதி ஆண்டு முடியில் 20,000 முதல் 25,000 கோடி ரூபாய் வரை வருவாய் இலக்கை வைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications