அமெரிக்க ஐடி நிறுவனமான காக்னிசென்ட் தங்களது அனைத்து பிரிவுகளிலும் தங்களது ஆதிக்கத்தினைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், தங்களது வியாபார இலக்கை எளிமையாக எட்டிப் பிடிக்கவும் பிற நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளது.
ஆனால் ஏற்கனவே இதுபோன்ற உத்திகளை இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்றவை சிறு நிறுவனங்களை வாங்கி வருகின்றன.
வெட்கப்படாமல் வாங்குவோம்
எனவே இந்திய ஐடி நிறுவனங்கள் போன்று வெட்கப்படாமல் நாங்களும் பெரிய நிறுவனங்களை வாங்குவது மட்டும் இல்லாமல் சிறிய நிறுவனங்களையும் வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எந்த நிறுவனங்கள் கையகப்படுத்தப்படும்?
நிறுவனங்களைக் கையகப்படுத்தும் போது முக்கியமாக எளிதாக எந்தத் துறைகளை எளிதாக ஒருங்கிமைக்குமோ அதனைச் சார்ந்த நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்படும். மேலும் அந்த நிறுவனத்தின் திறன், பறந்த வளர்ச்சி, புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் கூறியுள்ளார்.
உதாரணம்
2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான டிரைஜிட்டோ போன்ற நிறுவனங்களை வாங்க விரும்புவதாகவும், இந்த மென்பொருள் மாதிரிக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள்
நியூஜெர்சி, டீனேக்கில் தலைமையிடமாகக் கொண்ட காக்னிசான்ட் நிறுவனத்தில், அதன் 2.56 லட்ச ஊழியர்களில் 75 விழுக்காடு இந்தியா அல்லாது நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் சேவை
நிறுவனம் தொடர்ந்து கொள்முதல் செய்வதற்கான சந்தையைத் தொடர்ந்து சந்தைப்படுத்துகிறது என்றும் டிஜிட்டல் சேவை பெருகி வருவது ஒரு முக்கியக் காரணியாக உள்ளது என்று பிராசிஸ் டிசவுசா கூறினார்.
அன்மையில் கையகப்படுத்திய நிறுவனங்கள்
இந்த ஆண்டு ஜூன் மாதம் காக்னிசண்ட் TMM ஹெல்த் நிறுவனத்தை வாங்கியது, அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் பிரில்லியன்ட் சேவையை வாங்கியது. 2016 ஆம் ஆண்டில், இது மிராபியூ, ஐடியா கோடூரர் மற்றும் KBACE டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications