மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் எல்பிஜி கேஸ் மீதான விலை இன்று சிலிண்டருக்கு 7 ரூபாய் உயர்ந்துள்ளது. 2018 மார்ச் மாதத்திற்குள் சமையல் எரிவாயுவிற்கு உள்ள மானியத்தினை மொத்தமாக நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் 14.2 கிலோ சிலிண்டர் ஒன்றின் மீதான விலை டெல்லியில் 479.77 ஆக இருந்தது. அது தற்போது 487.18 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை
சென்னையில் 14.2 கிலோ சிலிண்டர் ஒன்றின் மீதான மானிய விலை 468.50 ரூபாயில் இருந்து 475.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மானியம் இல்லா சிலிண்டர்
அதே நேரம் மானியம் இல்லாத சிலிண்டர்கள் மீதான விலையினை 73.5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சென்ற மாதம் இதுவே 40 ரூபாய்க் குறைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஜூலை மாதம் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மாதம் 4 ரூபாய் என மானிய விலையைக் குறைத்து இந்த நிதி ஆண்டுடன் முழுமையாக நீக்கும் என்று கூறியிருந்தார்.
ஆகஸ்ட் மாத உயர்வு
இதனை அடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி 2.31 ரூபாயினை மானிய விலை சிலிண்டர்கள் மீதான விலை உயர்த்தப்பட்டது.
விமான எரி பொருள்
எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருட்கள் மீதான விலையினை 4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. 48,100 ரூபாயாக இருந்த கிலோ லிட்டர் விமான எரிபொருட்கள் மீதான விலையினை 1,910 ரூபாய் உயர்த்தி 50,020 கிலோ லிட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை உயர்வு
மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் மீதான விலையினையும் மத்திய அரசு லிட்டருக்கு 25 பைசா உயர்த்தியுள்ளது.
விலை மாற்றம்
உலகச் சந்தையில் உள்ள விலை மாற்றத்தினைப் பொருத்து ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி மற்றும் விமான எரி பொருட்கள் மீதான விலையினை மாற்றி அமைக்கும்.
மே 30ம் தேதி முதல் 4 வது முறையாக எல்பிஜி சிலிண்டர்கள் மீதான விலையினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications