அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கலந்தாய்வு ஏஐசிடிஇ நாடு முழுவது உள்ள பொறியியல் கல்லூரிகளில் 800-ஐ மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஏஐசிடிஇ அறிவித்துள்ள அந்த 800 கல்லூரிகளிலும் கவுசிலிங்கில் யாரும் அந்தக் கல்லூரிகளைத் தேர்வு செய்யவில்லை என்பதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவது என அதன் தலைவர் அணில் தத்தாதியா தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் கல்லூரிகள்
ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-ன் கடுமையான விதிகளால் 150 கல்லூரிகள் வரை கட்டாயம் மூடப்படுகின்றது. ஏஐசிடிஇ-ன் விதிகளின் படி அந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் இல்லி, 30 சதவீதத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது என்றும் அதுவே கல்லூரிகளை மூடக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணையதளத்தில் உள்ள தரவு
ஏஐசிடிஇ இணையதளத்தில் உள்ள விவரங்களின் படி 2014 ம்னுதல் 2017 வரையில் மட்டும் 410 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் 20வது கல்லூரிகள் கர்நாடகாவில் உள்ளவை ஆகும்.
எந்த ஆண்டு அதிகப்படியான கல்லூரிகள் மூடப்பட்டன?
2016-2017 நிதி ஆண்டில் தான் அதிகப்படியான கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
செயல்பட முடியாத கல்லூரிகளின் நிலை
செயல்பட முடியாத பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு
ஏஐசிடிஇ பொறியியல் படித்து முடித்து வெளியில் வரும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றது.
இண்டர்ன்ஷிப்
வரும் ஆண்டு முதல் அனைத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுப் படிக்கும் மாணவர்களும் இண்டர்ன்ஷிப்பிற்குக் கட்டாயம் செல்ல வேண்டும், அதனால் மாணவர்களுக்கு எளிதாக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications