இந்தியாவில் தங்களது செயல்பாடளை குறைக்க முடிவு செய்துள்ளது அமெரிக்க விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நைக், இதன் ஒரு கட்டமாகச் சதவீத ஊழியர்களை நீக்கியுள்ளது.
ஊழியர்கள் நீக்கம் மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட ஊழியர்களை எல்லாம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பணி செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
உலக மறுசீரமைப்புச் செயல்முறை
உலக அளவில் நிறுவனம் மற்றும் வியாபாரத்தினை மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்துள்ள நைக் நிறுவனம் நியூ யார்க், ஷாங்காய், லண்டன், டோக்கியோ, பாரிஸ் மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட 12 நகரங்களில் 2020-ம் ஆண்டிற்கு 80 சதவீத வளர்ச்சியினை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
இந்திய நகரங்கள் இல்லை
இதில் முக்கியமானது என்னவென்றால் இந்தியாவில் இருந்து ஒரு நகரம் கூடப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது ஆகும்.
இந்தியாவில் நைக்
நைக் நிறுவனம் இந்தியாவில் 2005-ம் ஆண்டுக் கால் பதித்தது, ஆனால் சந்தையில் பெரியதாக இவர்களுக்கு வளர்ச்சி இல்லை. எனவே தற்போது வரை இந்தியாவில் இருந்து 35 சதவீத கடைகளை மூடியுள்ளது.
தற்போதைய நிலை
தற்போது நைக் நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தமாக 200 கடைகள் உள்ளன.
கிரிக்கெட்
இந்தியாவை விட்டு வெளியேறும் முதற்கட்டமாகக் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிகளை நைக் நிறுவனம் குறைத்துள்ளது. இது செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
பணி நீக்கம்
பணி நீக்கம் குறித்த கேள்வியினை இந்திய நைக் பிரிவு செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம். அதற்கு அவர் நுகர்வோர் நேரடி குற்றச்சாட்டிற்கு எதிராக நிறுவனத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எங்கள் நுகர்வோருக்கு வேகமாகவும் தனிப்பட்ட முறையில் பணியாற்றவும் உதவும் திட்டமாக, தொழிலாளர் குறைப்புக்கள் இருக்கும், அதற்கான பணிகள் தான் இந்தியாவில் தொடர்ந்து வரும் என்று தெரிவித்தார்.
அலுவலகங்கள்
இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நைக் நிறுவனத்திற்கு டெல்லி மற்றும் மும்பையில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
வருவாய்
2005-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையைத் துவங்கிய நைக் நிறுவனம் 2015-ம் ஆண்டுப் பெற்ற 803 கோடி வருவாயில் இருந்து 2016-ம் ஆண்டு 764 கோடியாகச் சரிந்தது. நட்டம் தொடர்ந்து இரண்டு வருடமாகவும் அதிகரித்து வருவதாகவும் 2014-2015 நிதி ஆண்டில் 101 கோடி வருவாய் இழப்பும், 2015-2016 நிதி ஆண்டில் 170 கோடியும் இழப்பினை சந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications